எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்தி ஒடுக்கும் முயற்சி
4 Jul 2026, 9:42 pm

எப்சிஆர்ஏ சட்டத் திருத்தம் சிறுபான்மை அமைப்புகளை அச்சுறுத்தி ஒடுக்கும் முயற்சி

மதுரை, ஜூலை 4 - ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங் காற்றுச் சட்டத் திருத்த மசோதா (FCRA-2026), சிறுபான்மை அமைப்பு களை அச்சுறுத்தி அவர்களின் ஜன நாயகக் குரலை ஒடுக்கும் முயற்சி என மாநிலங்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினருமான ஜான் பிரிட்டாஸ் குற்றம் சாட்டி னார். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை மாலை நடை பெற்ற மாபெரும் சிறப்பு மாநில மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர், நாட்டின் மதச்சார்பின்மை யையும் அரசியலமைப்பையும் பாது காக்க அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என அறைகூவல் விடுத்தார். மாநாட்டில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி. பேசியதாவது:

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விலக்கா? அரசின் இரட்டை நிலைப்பாடு

மக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் அமைப் பைச் சேர்ந்தவர்களால் அயோத்தி யில் மட்டும் சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிற்கு நிதி முறைகேடு கள் நடைபெற்றுள்ளதாகக் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், இதுவரை எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யாமல் லட்சக்கணக் கான ரூபாய் அந்நிய நிதி பெற்று இயங்கி வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கட்டுப்படுத்த இந்தச் சட்டம் முன்வரவில்லை. மாறாக, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளிய மக்களுக்குக் கல்வி, மருத்துவச் சேவைகளை வழங்கி வரும் சிறுபான்மை அமைப்புகளை நோக்கி, “பள்ளி களையும் மருத்துவமனைகளை யும் நடத்தாதீர்கள்” என்ற நிலைப் பாட்டை ஒன்றிய அரசு எடுக்கிறது. சிறுபான்மை அமைப்புகள் தொட ர்ந்து சேவை செய்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது. இது பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உருவாக்கி வரும் ஆபத்தான அரசியல் செயல்திட்டத் தின் ஒரு பகுதியாகும்.

எல்லைக் கட்டுப்பாடும் சேவை முடக்கமும்

கடந்த ஜூன் மாதத்தில் மாற்றப் பட்டுள்ள புதிய விதிமுறைகளின் படி, ஒரு நிறுவனம் ஒரு மாநிலத்தை அல்லது ஒரு யூனியன் பிரதேசத்தை மட்டுமே தனது செயல்பாட்டு எல் லையாகத் தேர்வு செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள் ளது. இது மிகவும் மனிதத்தன்மை யற்ற ஏற்பாடாகும். தில்லியில் தொழுநோயாளிகளுக்கான சேவை நிறுவனத்தை நடத்தி வரும் கன்னி யாஸ்திரிகள் என்னிடம் தங்களது வேதனையைப் பகிர்ந்து கொண்ட னர். உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகளை அனுமதித்தால் எப்சிஆர்ஏ உரிமம் ரத்து செய்யப் படுமா, என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது. இயற்கைப் பேரிடர் போன்ற காலங்களில் அண்டை மாநில மக்க ளுக்கு உதவ முடியாத நிலையை இச்சட்டம் உருவாக்குகிறது. எந்த அரசு அதிகாரியும் செய்ய முன் வராத தொழுநோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர் பராமரிப்புப் பணி களை இரவும் பகலும் செய்து வரும் எளிய கன்னியாஸ்திரிகளின் சேவை யைப் பாதிக்கும் வகையில் இந்த எப்சிஆர்ஏ திருத்தம் கொண்டு வரப் பட்டுள்ளது. ஒரு நிறுவனத்தின் மொத்த நிதியில் வெறும் ஒரு சதவிகி தம் மட்டுமே வெளிநாட்டு நிதியாக இருந்தாலும், அதைக் காரணம் காட்டி அந்த நிறுவனத்தின் முழுச் சொத்துகளையும் அரசால் நியமிக் கப்படும் அதிகாரி கையகப்படுத்த முடியும் என்ற விதி அநீதியானது.

மதவெறி அரசியலும் மணிப்பூர் வன்முறையும்

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்கள் என யாராக இருந்தாலும், மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்துத் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தவே ஆட்சியாளர்கள் முயல்கின்றனர். கேரளத்தில் அனைத்து மதத்தின ரும் சகோதரத்துவத்துடன் பண்டி கைகளைக் கொண்டாடி மகிழும் மதச்சார்பற்ற சூழலே நிலவுகிறது. ஆனால், இந்த நாடு இப்படியே ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதுதான் தற்போதைய ஆட்சி யாளர்களின் நோக்கம். இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் நான் மணிப்பூருக்கு நேரில் சென்றிருந் தேன். கேரளத்தைப் போல ஒற்றுமை யாக வாழ்ந்த மெய்டெய், நாகா, குக்கி சமூகத்தினரைத் தங்களது அரசியல் ஆதாயத்திற்காகப் பிரித்து வன்முறை யைத் தூண்டியுள்ளனர். இன்று குக்கி மக்கள் இம்பால் பள்ளத்தாக்கிலிருந்தும், மெய்டெய் மக்கள் மலைப்பகுதிகளி லிருந்தும் விரட்டப்பட்டுள்ளனர். அப்பா விப் பெண்கள் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட பிறகும் பிரத மர் மவுனம் காக்கிறார். சர்வதேச அரங்கில் இழந்த சுயமரியாதை ஒன்றிய அமைச்சர்களான ஜே.பி. நட்டா, நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய் சங்கர், பியூஷ் கோயல் உள்ளிட்ட பலரும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங் களில் படித்து வளர்ந்தவர்கள் தான். அவர்களை யாரும் மதமாற்றம் செய்ய வில்லை, அவர்களின் குழந்தைகளும் வெளிநாடுகளில் இத்தகைய நிறுவ னங்களில் தான் படிக்கிறார்கள். அப்படி யிருக்க, கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீது மதமாற்றக் குற்றச்சாட்டைச் சுமத்து வது அடிப்படையற்றது. மறுபுறம், சர்வதேச அரசியலில் இந்தியா தனது சுயமரியாதையை இழந்து வருகிறது. காசாவில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் கொல்லப் பட்டபோதும், இந்திய அரசு உறுதி யான குரல் எழுப்பவில்லை. ஆனால், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இராக் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை இந்திய நாடாளுமன்றமே கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றி யது. ஹிட்லரின் தொடக்கக்கால நடவ டிக்கைகளை மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்திருந்தால் ஜெர்மனியின் பேரழி வைத் தடுத்திருக்க முடியும் என்று விஞ் ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் குறிப்பிட் டதை நாம் நினைவுகூர வேண்டும். நாடாளுமன்றத்தில் இடதுசாரி களின் எண்ணிக்கை குறைவாக இருந் தாலும், மக்கள் உரிமைகளுக்காகப் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு முன்னால் நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நாம் கம்யூ னிஸ்டாக, காங்கிரஸ்காரராக, இந்து வாக, முஸ்லிமாக, கிறிஸ்தவராக இருந்தாலும், மதச்சார்பின்மையை யும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க ஒன்றிணைந்து போராட வேண்டும். இவ்வாறு ஜான் பிரிட்டாஸ் எம்.பி. முழங்கினார்.