தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தை மக்கள் சக்தியால் முறியடிப்போம்!

4 Jul 2026, 8:03 pm
எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தை மக்கள் சக்தியால் முறியடிப்போம்!

எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்தத்தை மக்கள் சக்தியால் முறியடிப்போம்!

சமூகச் சேவை நிறுவனங்களின் சொத்துக்களைக் குறிவைத்து ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள எஃப்சிஆர்ஏ (FCRA) சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் மதுரையில் மாபெரும் சிறப்பு மாநில மாநாடு நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே நடைபெற்ற இம்மாநாட்டில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடே சன், மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டிற்கு மாநிலப் பொதுச் செயலாளர் பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

சிறுபான்மை நிறுவனங்களை முடக்கும் சதி

மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி., பேசுகை யில், “வக்ஃப் வாரிய சட்டத்திருத்தம் மூலம் “வக்ஃப் சொத்துக்களைக் குறிவைத்தது போலவே, தற்போது சிறுபான்மை மக்களின் நூறாண்டு காலக் கல்வி, மருத்துவ நிறுவனங்களின் சொத் துக்களைப் பறிக்க எஃப்சிஆர்ஏ சட்டத் திருத்த மசோதா–2026 கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரையின் வளர்ச்சியை இங்குள்ள கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் இல்லாமல் கற்பனை செய்ய முடியாது. சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய கல்வி நிறுவனங்களில் பயின்ற வர்கள்தான். ஒரு நிறுவனத்தின் சிறிய பிரிவில் நிர்வாகக் குறைபாடு இருந்தால்கூட, அதன் மொத்தச் சொத்துகளையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த மசோதா வழிவகுக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்சிஆர்ஏ உரிமங்கள் ரத்து செய்யப் பட்டுள்ளன. இந்தச் சட்டம் சிறுபான்மை நிறுவ னங்களை அச்சுறுத்தி, அவர்களின் ஜனநாயகக் குரலை ஒடுக்கும் முயற்சியாகும். கடந்த மார்ச் 25 அன்று இந்த மசோதா அறி முகப்படுத்தப்பட்டபோது, எதிர்க்கட்சிகள் வர முடி யாத நேரமாகப் பார்த்து அவசரமாக நிறைவேற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டது. ஆனால், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த இடதுசாரி எம்பிக்கள் உட னடியாக தில்லி விரைந்து தங்களது கடுமை யான எதிர்ப்பைப் பதிவு செய்து முறியடித்த னர். நாடாளுமன்றத்தில் தங்களது பெரும் பான்மையால் பாஜக இந்தச் சட்டத்தை நிறை வேற்றினாலும், 140 கோடி மக்களின் ஜனநாயகக் குரலுக்கு முன்னால் எந்த அரசும் நிற்க முடியாது. இந்த மக்கள் விரோதச் சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கு வோம்” எனக் கூறினார்.

வக்ஃப் சட்டத்தைவிட ஆபத்தானது: எஸ். நூர்முகமது

முன்னதாக, மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு வின் மாநிலத் தலைவர் எஸ். நூர்முகமது, “பாஜக ஆட்சியில் லவ் ஜிகாத், பசுவதை என்ற பெயர்களில் சிறுபான்மையினரின் வாழ்வுரிமை மீது தாக்குதல்கள் தொடர்கின்றன. வக்ஃப் திருத்தச் சட்டத்தைவிட எஃப்சிஆர்ஏ திருத்தம் மிகவும் ஆபத்தானது. வக்ஃப் சட்டத்தில் சொத்தைப் பறிமுதல் செய்ய யாராவது உரிமை கோர வேண்டும்; ஆனால் எஃப்சிஆர்ஏ சட்டத்தில் அரசு சந்தேகப்பட்டாலே போதும், பள்ளிகள், அனாதை இல்லங்கள், தேவாலயங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய முடியும். எஃப்சிஆர்ஏ மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் அனைத்துச் சமூக மக்களையும் இணைத்துப் போராடுவோம்” என்றார்.

அமைப்புகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதா?

கும்பகோணம் தவத்திரு திருவடிக்குடில் சுவாமி கள், “இந்தியாவிலும் தமிழகத்திலும் காவி ஆடைக்கு எதிரான மனநிலை உருவாக்கப் பட்டுள்ளது. காவி என்பது கொள்கையின் அடையாளமே தவிர வேறல்ல. வெளிநாட்டு நிதி பெற்று சமூக நலப் பணிகளை மேற்கொள்ளும் அமைப்புகளைச் சந்தேகத்தின் அடிப்படையில் தேசத்துரோகிகளாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த அநீதியை மக்கள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

ஏழை மக்களின் சேவைக்கு எதிரான நடவடிக்கை

மதுரை மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டி. நாகராஜன் பேசுகையில், “சிறுபான்மையினரை இரண்டாம் தரக் குடிமக்களாக மாற்றும் நோக்கு டன் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்கன் கல்லூரி, பாத்திமா கல்லூரி, லேடி டோக் கல்லூரி போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் சொத்துகளைக்கூட பறிமுதல் செய்ய வழிவகை செய்யப்படுகிறது. இது கிறிஸ்த வர்களுக்கு மட்டுமல்ல, கல்வி, மருத்துவ சேவை களை நம்பியிருக்கும் ஒட்டுமொத்த ஏழை மக்களுக்கும் எதிரான நடவடிக்கை” எனக் குற்றம்சாட்டினார்.

தலைவர்கள்

மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர் கே. அலாவுதீன் வரவேற்புரையாற்றினார். திண்டுக்கல் ஆயர் மேதகு தாமஸ் பால்சாமி, டி.என்.பி.சி. சி.இ.ஐ.ஆர்.டி. தலைவர் மேதகு லாரன்ஸ் பயாஸ், முதன்மை குரு ஜான் பிரிட்டோ பாக்கியராஜ், மாநி லப் பொருளாளர் ஒய். இஸ்மாயில், வழக்கறி ஞர்கள் பெர்ணாண்டஸ் ரெத்தினராஜா, ஹென்றி திபேன், அல்ஹாஜ் எஸ்.ஏ. லியாகத் அலி உள்ளிட்ட சமய, சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலை வகித்து வாழ்த்தினர். மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி நன்றியுரை வழங்கினார். செய்தி, படங்கள் : ஜெ.பொன்மாறன், பா.ரணதிவே

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு விலக்கா? அரசின் இரட்டை நிலைப்பாடு!

மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவர் எம். ராமகிருஷ்ணன் முன்மொழிந்த தீர்மானத்தில், எஃப்சிஆர்ஏ திருத்த மசோதாவின் ஆபத்துகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்தின்படி, ஒரு நிறுவனத்தின் ஐந்தாண்டுக்கான புதுப்பித்தல் மறுக்கப்பட்டாலோ அல்லது காலதாமதம் ஏற்பட்டாலோ நிறுவனப் பதிவு ரத்தாகிவிடும். அப்படி ரத்து செய்யப்பட்டால், அந்நிறுவனத்தின் சொத்துக்கள் மற்றும் வங்கிப் பணம் அனைத்தும் ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் அதிகாரியின் (Designated authority) வசமாகி, பின்னர் அரசின் பொதுக் கணக்கிற்குமாற்றப்பட்டுவிடும். இதனால் புகழ்பெற்ற மிஷன் மருத்துவமனைகள், பள்ளிகள், தேவாலயங்கள், கோவில்கள், மசூதிகள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டிற்குச் செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகளுக்குத் தலையிட எந்த அதிகாரமும் இல்லை. இதன் மூலம் கல்வி, மருத்துவம், தொழுநோயாளிகள் பராமரிப்பு, அனாதை இல்லங்கள் உள்ளிட்ட சமூகச் சேவைகள் முற்றிலும் முடங்கி, லட்சக்கணக்கான தன்னார்வ வேலைவாய்ப்புகள் பறிபோகும். இது சிறுபான்மையினரை மட்டுமல்லாமல், அதன் மூலம் பயன்பெறும் பெரும்பான்மை சமூகத்து ஏழை மக்களையும் கடுமையாகப் பாதிக்கும். அதேநேரம், எந்தச் சட்டத்தின் கீழும் பதிவு செய்யாமல் லட்சக்கணக்கான ரூபாய் அந்நிய நிதி பெற்று இயங்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பை இச்சட்டம் கட்டுப்படுத்தாது என்பது, சிறுபான்மையினருக்கு எதிரான அரசின் இரட்டை நிலைப்பாட்டையும் வெறுப்பு அரசியலையும் வெளிப்படுத்துகிறது. எனவே, இந்தச் சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.