தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத் திருத்த மசோதா - 2026 மோடி அரசின் அடுத்த கட்ட தாக்குதல் - எஸ்.நூர்முகம்மது

26 Jun 2026, 8:13 pm
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத் திருத்த மசோதா - 2026  மோடி அரசின் அடுத்த கட்ட தாக்குதல் - எஸ்.நூர்முகம்மது

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்றுச் சட்டத் திருத்த மசோதா - 2026 மோடி அரசின் அடுத்த கட்ட தாக்குதல் - எஸ்.நூர்முகம்மது

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி ஒன்றிய ஆட்சியில் அமர்ந்தது முதல் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பரசியலும், சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல்களும் அன்றாடம் தொடர்கதையாக நடந்தேறி வருகின்றன. நரேந்திர மோடி ஆர்.எஸ்.எஸ். எனும் பாசிச அமைப்பின் பிரச்சாரகர். ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை மக்களை இரண்டாம் தர பிரஜையாகக் கருதும் ஓர் அமைப்பு. அதனால் வழிநடத்தப்படும் பாஜகவின் ஆட்சியில் அவர் பிரதமர் பொறுப்பில் உள்ளார். மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின் பேரில் உறுதிமொழி எடுத்து ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்துள்ள அவரே சிறுபான்மை மக்களுக்கு எதி ரான நச்சைக் கக்குவதில் முதன்மையானவராக உள்ளார். மேலும், சிறுபான்மையினரின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமை, ஏன் உயிர் வாழும் உரிமையைக் கூடப் பறிக்கும் சட்டங்களையும், திட்டங்களையும் தொடர்ந்து அமலாக்கி வருகிறார்.

அலையலையாக வரும் தாக்குதல்கள்

2014-இல் ஒன்றிய ஆட்சி பாஜகவின் வசம் வந்த பின்னர் தொடர்ச்சியான தாக்குதலுக்குச் சிறுபான்மை மக்கள் உள்ளாக்கப்படுகின்றனர். பசு வதை தடைச் சட்டத்தின் பெயரால் சங் பரிவாரத்தைச் சார்ந்த சமூக விரோதிகளால் பசு மாமிசம் வைத்திருந்ததாகக் கூறி, பசு மாமிசம் உண்பதாகக் கூறி நடத்தப்பட்ட படுகொலைகள் ஏராளம். அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளின் காவல்துறையினரே உடந்தை. இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதற்காகவே காத லித்துத் திருமணம் செய்வதாக ‘லவ் ஜிகாத்’ எனும் ொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பி இஸ்லாமிய இளைஞர்கள் மீது தாக்குதல்கள், படுகொலைகள், பொய் வழக்குகளில் கைது எனத் தொடரும் அக்கிர மங்கள் சொல்லி மாளாது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற ஒன்று சிறு பான்மை மக்களைக் குடியுரிமையற்றவர்களாக்கும் சதித் திட்டத்துடனே கொண்டு வரப்பட்டது. மத அடிப்ப டையில் குடியுரிமையை முடிவு செய்யக் கூடாது என்ற அரசியல் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் அச் சட்டம் குடியுரிமையற்றவர்கள் எனக் கூறி, தனி முகாமில் அடைத்து, நாட்டை விட்டே வெளியேற்றும் திட்டத்துடன் கொண்டு வரப்பட்டது. அதற்கு எதிராக அமைதி வழியில் போராடிய மாணவர்கள் வழக்கு கள் நடக்காமலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாகச் சிறைக் கொட்டடியில் அடைபட்டுக் கிடக்கும் அநீதி அரங்கேறியுள்ளது. மதமாற்றத் தடைச்சட்டம் பல மாநில பாஜக அரசுகளால் கொண்டு வரப்பட்டு சிறு பான்மை மத நிறுவனங்களை மிரட்டிக் கொண்டிருக்கி றது. பாஜக ஆளும் சில மாநிலங்கள் பொது சிவில் சட்டம் என்ற பெயரால் சிறுபான்மை சமூகங்களின் மத அடிப்படையிலான வாழ்க்கை முறைகளையும், பன்மு கப் பண்பாட்டுக் கூறுகளையும் அழித்து ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்க முனைந்து கொண்டிருக் கின்றன.

பல நூறு ஆண்டுகளாக இஸ்லாமிய சமூகத்திற்கு உரிமையான, வக்பு வாரியங்களால் நிர்வகிக்கப் பட்டு வந்த சொத்துக்களைக் கபளீகரம் செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்டது வக்பு வாரிய திருத்தச் சட்டம். அச்சட்டத்தின் படி முஸ்லிம்களின் மத அடிப்ப டையில் உரிமைப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் வக்பு வாரியத்தில் முஸ்லிம்கள் அல்லாதவர்களே தீர்மானிப்பவர்களாக மாற்றவும், காலம் காலமாக இஸ்லாமிய மக்களால் அனுபவிக்கப்பட்டு வரும் சொத்துக்களை அரசே கைவசப்படுத்தவும் வகை செய்யும் திருத்தங்கள் அவை.

2025, 2026 சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டி தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்ற பெயரால் பல லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்க ளைப் பட்டியலிலிருந்து நீக்கி அவர்களின் வாக்குரிமை யைப் பறித்ததோடு, அவர்களின் குடியுரிமையையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த ஆண்டு மகளிருக்கு இட ஒதுக்கீடு எனக் கூறி, தொகுதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும், தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யவும் அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 34% முஸ்லிம்கள் வாழும் அசாம் மாநிலத்தில் முஸ்லிம் கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் வாய்ப்பை றுக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்ததைப் போல் நாடு முழுக்க செய்ய அரசு துடித்தது. அது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் காரணமாக நாடாளு மன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. தற்போது கட்சித் தாவலை ஊக்குவித்து, நாடாளுமன்றத்தில் கட்சிக ளின் பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி அந்த அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்றத் திட்டமிடு கிறது மோடி அரசு. தற்போது ஒன்றிய அமைச்சரவை யில் சிறுபான்மை சமூகங்களைச் சார்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை.

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டத் திருத்தம், 2026

வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்காற்று சட்டம் ஒன்று 2010 செப்டம்பர் 27-இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அமலில் இருந்து வருகிறது. அது வெளிநாட்டு நிதி உதவி பெறும் தனிநபர்கள், அமைப்புகள், நிறுவனங்கள் வெளிநாட்டு நிதி பெறு வதையும், அந்நிதி பயன்பாடு குறித்தும் ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. அந்தக் கட்டுப் பாடுகளை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கவும் அச்சட்டம் வழிவகை செய்கிறது. அரசியல் கட்சிகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், நீதிபதிகள், செய்தி நிறுவனங்கள் உட்பட பல தரப்பினரும் வெளி நாட்டு உதவி பெறத் தடையுள்ளது. அரசிடம் பதிவு செய்யப்பட்ட அமைப்பு, அரசின் அனுமதியுடனேயே பொது நல சேவைக்குப் பயன்படும் வகையில் வெளி நாட்டு நிதி உதவி பெற இயலும். அதுவும் அரசின் கண்காணிப்புக்கு உட்பட்டது. அப்படி வெளிநாட்டு உதவியுடன் நமது நாட்டில் ஏராளமான தன்னார்வ அமைப்புகள் அரசின் அனுமதியுடன் வெளிநாட்டு நிதி உதவி பெற்று மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோ ருக்கான விடுதிகள் உட்பட பல சமூக நல அமைப்பு களைக் காலம் காலமாக நடத்தி வருகின்றன. பெரும் பாலான இத்தகைய நிறுவனங்கள் கிறிஸ்தவ அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தாலும், அத னால் பலனடைந்து வருபவர்கள் இயல்பாகவே பெரு மளவில் இந்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் தான். ஏற்கெனவே இருந்த சட்டத்தின் படி தவறான முறை யில் வெளிநாட்டு நிதி உதவி பெற்றாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ, உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இருந்தாலோ அந்த சொத்துக்களை உரிய சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி அரசு கைவசப்படுத்த இயலும். இருந்தும் பாஜக அரசு பல கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட திருத்தங்களை 2020-இல் மேற்கொண்டது.

இந்நிலையில் தான் பாஜக அரசு திடீரென 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நடைமுறைகள் துவங்கி, தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 25.03.2026-இல் ஒரு புதிய சட்ட திருத்த மசோதாவை (FCRA) நாடாளுமன்றத்தில் அறி முகப்படுத்தியது. எதிர்க்கட்சி எம்பிக்கள் தேர்தல் பணிகளில் உள்ள நிலையில் அவசர அவசரமாக, விவாதமோ, எதிர்ப்புகளோ இல்லாமல் இந்தச் சட்ட திருத்தத்தை நிறைவேற்றத் திட்டமிட்டது. ஆனால் அசாம் உட்பட உள்ள கிறிஸ்தவர்கள் கணிசமாக வுள்ள மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில் அதனால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தின் காரணமாக அதை வாக்கெடுப்புக்கு விடாமல் ஒத்தி வைத்தது. அடுத்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அது நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்தத் திருத்தங்களின் படி பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்தை உரிய காலத்தில் புதுப்பிக்கத் தவறி னாலோ, அல்லது கால தாமதம் ஏற்பட்டாலோ அல்லது பதிவைப் புதுப்பிக்க மறுக்கப்பட்டாலோ அந்நிறுவ னம் தனது செயல்பாட்டை இழந்து விடும். உடன டியாக அந்நிறுவனத்தின் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள், அதன் கையிருப்பில் உள்ள நிதி உட்பட அனைத்தும் அரசின் வசம் தானாகவே சென்று விடும். அதற்கான சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்றத் தேவையில்லை. அப்படி அவற்றைப் பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசால் நியமிக்கப் படும் அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சட்ட திருத்தங்கள் அரசுக்கு வரையறையற்ற அதிகாரத்தை வழங்குவதோடு மாநில அரசுகள் தலையிடுவதற்கான உரிமையையும் மறுக்கிறது. இப்படி கைவசப்படுத்தப் படும் அசையா சொத்துக்கள், அசையும் சொத்துக்க ளை விற்றுக் கிடைக்கும் பணத்தையும் மற்றும் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் அரசின் கஜா னாவில் சேர்க்கவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. இன்றைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நன்கொடைகளைப் பெற்று வரும் சங் பரிவார நிறுவ னங்கள் எதற்கும் எதிராக இந்தச் சட்டம் இல்லை. ஏனெனில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாட்டு நன்கொடை பெறும் நிறுவனங்கள் பதிவு பெறாமலேயே செயல் படுகின்றன.

முடக்கப்படும் சிறுபான்மை நிறுவனங்களும் நமது கடமையும்

இச்சட்ட திருத்தம் சிறுபான்மை மத நிறுவனங்க ளின் செயல்பாடுகளை முடக்கவும், அவர்களின் சொத்துக்களை அரசு பறிமுதல் செய்யவும் தன்னிச் சையான, அளவற்ற அதிகாரங்களைக் கொடுக்கிறது. இது சிறுபான்மையினரைக் குறிவைத்து பாஜக அரசு மேற்கொள்ளும் வெறுப்பரசியலின் ஒரு பகுதியேயா கும். 22.06.2026-இல் ஒன்றிய அரசு ஏற்கெனவே இருக்கும் சட்டத்திலேயே பல புதிய விதிகளை அறி வித்துள்ளது. இவ்விதிகள் பதிவைக் கடுமையாக்கக் கூடியவை. எனவே, இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்கெனவே இந்நிறுவனங்களின் சமூக சேவைகளால் பலனடைந்துள்ள பல கோடிக்கணக்கான மக்களை, அதிலும் குறிப்பாக மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் உட்படவுள்ள சமூக சேவை நிறுவனங்களின் சேவைகளைப் பெற்றுவரும் இந்து சமூகத்தினரையும் கூட பெருமளவில் பாதிக்கும் எதேச்சதிகார நடவடிக்கையாகும்.

ஜூலை 3 மாநாடு

இவற்றைக் கண்டித்துத் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு 2026 ஜூலை 3-இல் மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்றினை நடத்துகிறது. எனவே, எளிய மக்களைப் பாதிக்கும் அரசின் இத்தகைய கொடூ ரமான சட்டத்திற்கு எதிராக சாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பகுதி மக்களும் அணிதிரள வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.