எப்.சி. கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
24 Nov 2025, 5:22 pm
<p><strong>எப்.சி. கட்டண உயர்வை ஒன்றிய அரசு திரும்பப் பெற லாரி உரிமையாளர்கள் கோரிக்கை</strong></p>
<p>நாமக்கல், நவ. 24- லாரிகள் மற்றும் கனரக வாகனங்க ளுக்கான தகுதிச் சான்றிதழ் (எப்சி) கட்டணத்தை ஒன்றிய அரசு பல மடங்கு உயர்த்தியுள்ளதை, உடனடியா கத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு மாநில லாரி உரிமையா ளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள் ளது. இது தொடர்பாக, சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ் மற்றும் செயலாளர் ராமசாமி ஆகியோர் கூட்டாக வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய சாலைப் போக்குவரத்து அமைச்சகம், கடந்த நவம்பர் 11 ஆம் தேதி வெளி யிட்ட அறிவிப்பின்படி, இருசக்கர வாக னங்கள் முதல் கனரக வாகனங்கள் வரையிலான அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் தகுதிச் சான்றிதழ் கட்டணத்தை உயர்த்த மத்திய மோட் டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்ய உத்தேசித்துள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறை குறித்து ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் இருந்தால் தெரி விக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்படி, கனரக வாகனங்களுக் கான எப்.சி. கட்டணத்தை மத்திய அரசு தற்போதுள்ள கட்டணத்தைவிடப் பல மடங்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, இதில், 10 முதல், 13 ஆண்டுகளுக்குட்பட்ட வாகனங்க ளுக்கு, ரூ. 1,000, 13 முதல் 15 ஆண்டு களுக்குட்பட்ட வாகனங்களுக்கு ரூ. 5,000 ரூபாய், 15 மற்றும் 20 ஆண்டுக ளுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு ரூ. 25,000 என எப்.சி., கட்டணம் நிர்ணயிக் கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நடை முறைக்கு வந்தால், ஓரிரு வாகனங் களை வைத்து தொழில் செய்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இவர்கள், பெரும்பாலும், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை வைத்துக் கொண்டு நெல், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களை ஏற்றிச் செல்கின்றனர். இத னால், இவர்கள் தொழிலை விட்டே வெளியேற்றப்படும் அவலநிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும், கொரோனா தொற்றுக்குப்பின், பல்வேறு தொழில்கள் நலிவடைந்துவிட்ட நிலை யில், லாரிகளுக்கு சரியாக லோடு கிடைக்காமலும், சுங்க கட்டணம், டீசல் விலை, காப்பீட்டுத் தொகை, உதிரிப் பாகங்கள் ஆகியவற்றின் விலை உயர்வுகளால், லாரித் தொழில் மிக வும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில், தகுதி சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படும்போது, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஓரிரு வாகனங்களை வைத்திருக்கும் பெரும் பான்மையான லாரி உரிமையாளர்கள், தங்களது குடும்பங்களை காப்பாற்ற முடியாமல், வாழ்வாதாரம் கேள்விக் குறியாகும் நிலைக்கு தள்ளப்படுவர். அதனால், ஒன்றிய சாலைப் போக்கு வரத்து அமைச்சகம், இந்த கட்டண உயர்வை உடனடியாக கைவிட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.</p>
