அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு மீது எப்.பி.ஐ பணமோசடி விசாரணை
9 Jul 2026, 10:20 pm
<p><strong>அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பு மீது எப்.பி.ஐ பணமோசடி விசாரணை</strong></p><p>அர்ஜெண்டினா கால்பந்து கூட்டமைப்பின் தலைவரான கிளாடியோ டாப்பியா தலைமை யிலான அணி நிர்வாகம், அமெரிக்க நிதி அமைப்பு கள் மூலமாகப் பல நூறு மில்லியன் டாலர்களை முறைகேடாகப் பரிமாற் றம் செய்துள்ளது தொடர் பாக எப்.பி.ஐ விசார ணையை தொடங்கி யுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகா ணத்தை தளமாகக் கொண்டு இயங்கும்‘டூர் பிராட் என்டர் எல்எல்சி’ (Tour ProdEnter LLC) என்ற நிறுவனம் மூல மாக இந்த நிதி பரிமாற்றங் கள் நடந்து ள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் அர்ஜெண் டினா நாடாளுமன்ற உறு ப்பினர் ஜேவியர் பரோனி மற்றும் அவரது மனைவி எரிகா ஜில்லெட் ஆகி யோருக்குச் சொந்தமான இந்த நிறுவனம், சிட்டி பேங்க், பேங்க்ஆப் அமெரிக்கா, ஜேபி மார்கன் உள்ளிட்ட முன்னணி அமெரிக்க வங்கிக் கணக்குகள் மூலம் சுமார் 260 மில்லியன் டாலர் (2,171 கோடி ரூபாய்) பணத்தைக் கையாண்டுள்ளது. இதில் எவ்வித பொருளாதார ஆதாரமும் இல்லாத 57 மில்லியன் டாலர் (ரூ. 475 கோடி) நிதி, பல்வேறு போலி நிறுவனங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள் ளதாகவும் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே எப்.பி.ஐ விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. அர்ஜெண்டினா கால்பந்து தலைவர் கிளாடியோ டாப்பியாவிற்கு இந்த உலகக்கோப்பை காலம் கடுமையான சோதனையாக மாறியுள்ளது. உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பே ஊழல் புகார்கள், உள் நாட்டு லீக் போட்டிகளில் செய்த குளறுபடிகள் எனப் பல விமர்சனங்களை அவர் சந்தித்து வந்தார்.</p>
