தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவில் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்

12 Jun 2026, 8:32 pm
இந்தியாவில் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்

இந்தியாவில் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் கல்லீரல் கொழுப்பு நோய்

மேதாந்தா மருத்துவமனை ஆய்வில் எச்சரிக்கை

நாட்டில் 20 முதல் 40 வயதுடைய இளம் வயதினர் பாதிப் பேருக்கு ‘ஃபேட்டி லிவர்’ (Fatty Liver) என அழைக்கப்படும் கல்லீர லில் கொழுப்பு படிதல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என மேதாந்தா மருத்துவமனை ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள பிரசித்தி பெற்ற மேதாந்தா மருத்துவமனையின் கல்லீரல் பிரிவு தலைவரும், பிரபல முதன்மை அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் அர விந்தர் சிங் சோயின் நடத்திய ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “எங்களது மற்றும் பெரும்பாலான மருத்துவமனைகளில் 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் கல்லீரல் தானம் செய்ய முன்வருவது வழக்கம்.

அதில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு ‘ஃபேட்டி லிவர்’ (கல்லீரலில் கொழுப்பு படிதல் நோய்) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு, தங்களின் பிள்ளைகள் அல்லது இளம் உறவினர்களிடமிருந்து கல்லீரல் தானம் பெற பரிசோதித்தபோது இந்த உண்மை வெளிவந்துள்ளது.

வாழ்வியல் முறை மாற்றங்கள்

இந்த இளைஞர்களில் பலர் வெளிப்புறத் தோற்றத்திற்கு ஆரோக்கியமாகத் தெரிந்தா லும், உட்கார்ந்தபடியே வேலை செய்யும் வாழ்வியல் முறை, மோசமான உணவுப் பழக்கம், மன அழுத்தம், உடல் பருமன், போதிய உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

. இந்தக் கண்டுபிடிப்பு களைத் தொடர்ந்து, அவர்களை தகுதியான கொடையாளர்களாக மாற்றும் அளவுக்கு விரைவாகக் குணப்படுத்த முடியுமா என்று அந்த மருத்துவக் குழுவின ரால் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் குறைந்த அளவிலான ‘செமாக்ளூடைடு’ அல்லது ‘டிர்பெசடைடு’ போன்ற மருந்துகள் வழங்கப் பட்டு, அதனுடன் தீவிரமான வாழ்வியல் முறை மாற்றங்களும் பரிந்துரைக்கப்பட்டன.

இந்த இரண்டு வழிகளின் கூட்டு முயற்சி வெறும் இரண்டு வாரங்களுக்குள் உடல் எடையைக் குறைக்க உதவியதோடு, கல்லீர லில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும் உதவி யது. கல்லீரல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்ப தில் வாழ்வியல் மாற்றங்களே முதன்மை யான காரணி ஆகும். எடைக் குறைப்பு மருந்துகள் அதன் வேகத்தை அதிகரிக்கும் ஊக்கியாக மட்டுமே செயல்படுகின்றன” என ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உடல் பருமன் இல்லாதவர்களுக்கும் ஆபத்து

ஆய்வறிக்கையைத் தொடர்ந்து டாக்டர் அரவிந்தர் சிங் சோயின் கூறுகையில், “ஃபேட்டி லிவர் பாதிப்பு உடல் பருமன் உள்ளவர்களை மட்டும்தான் தாக்கும் என்ற பொதுவான நம்பிக்கை தவறானது ஆகும்.

உடல் நிறை குறியீடு 24-க்குக் கீழ் உள்ளவர் களுக்கும், தவறான வாழ்வியல் பழக்கவழக்கங் கள் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. இதற்கு இன்சுலின் எதிர்ப்புத் திறன், குறைந்த தசை நிறை மற்றும் வயிற்றுப் பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பு போன்ற மறைமுக வளர்சிதை மாற்றப் பிரச்சனைகளே காரணம்.

மென்பானங்கள், பாக்கெட் ஜூஸ்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப் படும் ‘பிரக்டோஸ்’ எனப்படும் சர்க்கரை, ஃபேட்டி லிவர் பாதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பிரக்டோஸ் பெரும்பாலும் கல்லீ ரலில்தான் செயலாக்கம் செய்யப்படுகிறது; அங்கு அது கொழுப்பாக மாற்றப்பட்டு, படிப்படியாக இந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இரவில் 7 மணி நேரத்திற்கும் குறைவாக உறங்குபவர்களுக்கு ஃபேட்டி லிவர் ஏற்படும் வாய்ப்பு பல மடங்கு அதிகமாகும்.

அதனால் கல்லீரல் கொழுப்பு பாதிப்பு நோய் சத்தமில்லா மல் முற்றுவதைக் கருத்தில் கொண்டு, 30 வயதைத் தாண்டிய பெரியவர்கள் உடல் அமைப்பு மதிப்பீடுகள், இரத்தப் பரிசோதனை கள், ஸ்கேனிங் உள்ளிட்ட வழக்கமான பரி சோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும். முன்கூட்டியே கண்டறிந்தால் முழுமையாகக் குணப்படுத்தக்கூடிய சில நாள்பட்ட நோய்களில் ஃபேட்டி லிவர் நோயும் ஒன்று” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.