முந்தய பக்கம்

அப்பாதான் நான்..! தந்தையர் தினம் ஜூன் 21 - காயத்ரி மாணிக்கம்

20 Jun 2026, 8:47 pm
அப்பாதான் நான்..! தந்தையர் தினம் ஜூன் 21 - காயத்ரி மாணிக்கம்

அப்பாதான் நான்..! தந்தையர் தினம் ஜூன் 21 - காயத்ரி மாணிக்கம்

தூரத்தில் இருப்பார் அப்பா புரியாத புதிரில் அவர் மௌனம் நான் புரிந்த வயதிலிருந்து ஏதோ அறியாத வெறுப்பில் விலகித்தான் நிற்பேன்...

தள்ளியிருந்து தேவைக்கு தலைகவிழ்ந்து பேசுவேன் ஒருநாளும் அவருடன் விரும்பி எங்கேயும் பயணம் சென்றதில்லை...

மார்க் அட்டை கையெழுத்து அம்மா மூலமாக வாங்கி கல்லூரி பேரன்ஸ் மீட்டிங்கில் அப்பாவை யாரிடமும் அறிமுகமாக்கியதில்லை...

ஆனாலும் நண்பர்கள் வழியசென்று பேசும்போதெல்லாம் சாடையில் பார்க்கும் அப்பா புன்முறுவலை என்னில் அழுத்தி வைக்க தவறமாட்டார்...

எனது வாழ்க்கையில் ஒருமுறை மருத்துவமனை அப்பாக்கான வைத்தியத்திலும் பாகுபாடற்ற அன்னியத்தியே உறுதிபடுத்தி காட்டினேன்...

ஒருநாள் அப்பாவை எடுத்ததுக்கொண்டது காலம் வாசல் நின்று வருத்தமுடன் வந்தவர்களுக்கெல்லாம் துக்கம் சொன்னேன்...

அப்பாவின் நண்பர் என்னையே உற்று நோக்கி அப்பா மாதிரியே புன்முறுவலித்த போது உணர்வில் ஒன்று தோன்றியது....

‘அப்பன உரிச்சி வச்சுருக்கான்’ அப்பத்தா சொல்லியிருப்பாள் புரிதல் பக்குவத்தில் குளிர்ப்பெட்டி மேல் பூமாலை விலக்கி புன்முறுவலிக்கிறேன் அப்பாதான் நான்..!

- காயத்ரி மாணிக்கம்

Share
FacebookXWhatsAppTelegram