திருச்சி விரைவு செய்திகள்
16 Mar 2026, 4:46 pm

ஈரானில் வேலைக்குச் சென்ற வாலிபர் மாயம் மீட்டுத் தரக் கோரி ஆட்சியரிடம் தந்தை மனு

தூத்துக்குடி, மார்ச் 16- ஈரான் கப்பலில் வேலைக்குச் சென்ற தூத்துக்குடி வாலி பர் மாயமான நிலையில், அவரைக் கண்டுபிடித்துத் தரு மாறு மாவட்ட ஆட்சியரிடம் தந்தை மனு அளித்துள்ளார். தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஞானம் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: எனது மகன், கடந்த 07.05.2025 அன்று ஈரானில் கப்பலில் வேலைக்கு சென்றுள்ளார். தற்போது போர் சூழலில் எனது மகனைப் பற்றிய தகவல் இல்லை. எனவே, காணாமல் போன தனது மகனை மீட்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

குமரி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் விவரம்

நாகர்கோவில். மார்ச். 16- 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான குமரி மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி - புஷ்பா, தோவளை தாசில்தார் அலுவலகம், நாகர்கோவில் ஆர்.டி.ஓ காளீஸ்வரி ஆர்டிஓ அலுவலகம், குளச்சல் - கலைமதி குருந்தன்கோடு வட்டார அலுவலகம், பத்மநாபபுரம்- வினய்குமார் மீனா ஆர்.டி.ஓ அலுவலகம் , விளவங்கோடு-செந்தில் ராஜன் விளவங்கோடு தாசில்தார் அலுவலகம்கிள்ளியூர்- ஈஸ்வரன் கிள்ளியூர் தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

நாகர்கோவில். மார்ச். 16- கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த 6-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தூத்துக்குடியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி அலெக்ஸ் (44) கைது செய்யப்பட்டார். பெற்றோர் புகாரின் பேரில் குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அலெக்ஸை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்அடைத்தனர்.

7 ஆண்டுகளாக குண்டும் குழியுமான சாலை ரூ.96 லட்சத்தில் தார்ச்சாலை அமைத்ததாக விளம்பரம்

ஒட்டன்சத்திரம், மார்ச் 16- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் ஊராட்சி ஆதி புரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். ஆதிபுரத்திலிருந்து ரெங்கபாளையம்புதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக கடந்த 7 ஆண்டு களாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இச்சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசியல் கட்சி பிர முகர்கள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் செய்தும் புதிய தார் சாலை அமைக்க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படு கிறது. இந்நிலையில் நேற்று ஞாயிறன்று மாலை ரூ 96.40 லட்சம் மதிப்பீட்டில் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 24.9.2025ம் தேதி சாலை பணி தொடங்கி 6 மாதத்தில் அமைக்கப்பட்டதாக விளம்பர பலகையை குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வைத்துள்ளனர். எனவே, முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கண்டெய்னர் லாரியில் கடத்தி வரப்பட்ட மது பறிமுதல் நான்கு பேர் கைது

இராஜபாளையம், மார்ச் 16- இராஜபாளையம் அருகே வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் வெளிமாநில மதுபானங்களை கடத்தி வந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இராஜபாளையம் தெற்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்த பெட்டிகளை இறக்கி சொகுசு காரில் ஏற்றி கொண்டி ருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் போலீசார் பெட்டிகளை சோதனை செய்தனர். அப்போது அதில் கர்நாடகா மாநில முத்திரையுடன் கூடிய மதுபான பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்டெய்னர் லாரி மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து, அதிலிருந்த சுமார் 192 மது பான பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை கைப்பற்றினர். மேலும் திருநெல்வேலி மாவட்ட இடைக்கால் பகுதி யைச் சேர்ந்த முத்து கணேஷ் (22), இசக்கி பாண்டி (27), மாரி கணேஷ் (18), முத்து பாலசுந்தர் (33) ஆகிய நான்கு பேரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதொச ஆண்டிபட்டி ஒன்றிய மாநாடு

தேனி, மார்ச் 16- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஆண்டிபட்டி ஒன்றிய மாநாடு அனுப்பப்பட்டியில் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். கொடியை அன்னலட்சுமி ஏற்றி வைத்தார். இரங்கல் தீர்மானத்தை கே.கே.முருகன் வாசித்தார். மாநாட்டினை சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலா ளர் ஏ.வி.அண்ணாமலை தொடங்கி வைத்து பேசினார். ஒன்றியச் செய லாளர் எஸ்.அய்யர் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். விவசாயிகள் சங்க தலைவர் பி.ராமன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.ராமர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கர சுப்பு நிறைவுரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய தலைவராக எஸ்.அய்யர், செயலாளராக ஜெயராம், பொருளாளராக சந்தனப்பேச்சி உள்ளிட்ட 9 பேர் கொண்ட நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது.

தேர்தல் பணியின்போது சிஆர்பிஎப் வீரருக்கு மாரடைப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மதுரை, மார்ச் 16- மதுரையில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக ஜம்மு-காஷ்மீரிலி ருந்து வந்த மத்திய பாதுகாப்புப் படையான சி.ஆர். பி.எப் வீரர் ரியாஸ் அகமத் (45) மாரடைப்பு காரணமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மதுரைக்கு வந்திருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் உட னடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டா ரங்கள் தெரிவித்தன. அரசியல் கட்சிகள் கோரிக்கை இதனைத் தொடர்ந்து மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திங்களனறு அரசு மருத்துவ மனைக்கு நேரில் சென்று ரியாஸ் அகமத்தை சந்தித்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். மருத்து வர்களிடமும் சிகிச்சை நிலை குறித்து கேட்டறிந்தார். பாதுகாப்பு வீரர்களுக்கான வசதிகள் உறுதி செய்ய வேண்டும். சட்டமன்றத் தேர்தல் காலங்களில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் பணியாற்றும் வீரர்களுக்கு போதிய ஓய்வு, தங்கும் வசதி மற்றும் அடிப்படை வசதி கள் முறையாக வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தி யுள்ளனர். மேலும், அதிக மன அழுத்தம் ஏற்படும் வகையில் தொடர்ந்து பணிகளை வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும், கோடைக்காலம் என்பதால் மாநி லங்களின் இயற்கை சூழ்நிலை மாறுபாடுகள் காரண மாக வீரர்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் போதிய உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

தேனி ஆட்சியர் அறிவிப்பு தேனி, மார்ச் 16- தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேனி ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ரஞ்ஜீத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்ட மன்ற தொகுதிகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் வருகிற 30 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 ஆம் தேதி கடைசி நாள். மனுக்கள் பரி சீலனை ஏப்ரல் 7 ஆம் தேதி நடக்கி றது. மனுவை திரும்பப் பெற 9 ஆம் தேதி கடைசி நாள். வாக்குப் பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதியும் நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஞாயிறு முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதி களுக்கும் தேர்தல் நடத்தும் அலு வலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ள னர். அவர்களின் விவரம் (அடைப் புக் குறிக்குள் செல்போன் எண்) வருமாறு: ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவல ராக சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் கவிதா (79046 32181), உதவி தேர்தல் நடத் தும் அலுவலர்களாக தாசில்தார் ஜாஹீர்உசேன் (94450 00595), தனி தாசில்தார் இளங்கோ (99420 52330), பெரியகுளம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக சார் ஆட்சியர் ரஜத்பீடன் (94450 00451), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தாசில்தார் மருது பாண்டி (94450 00593), தனி தாசில்தார் பிரதீபா (98434 97676) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். போடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் நல்லையா (94450 00329), உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்களாக தாசில்தார் சந்திரசேகரன் (94450 00597), தனி தாசில்தார் யசோதா (89738 80773), கம்பம் தொகுதி தேர்தல் நடத்தும் அலு வலராக உத்தமபாளையம் கோட்டா ட்சியர் சையது முகதீன் இப்ராஹிம் (94450 00452), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக தாசில் தார் பாலசண்முகம் (94450 00596), தனி தாசில்தார் உதயராணி (97875 97597) ஆகியோர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டி ருந்தது.

தேனி: தலா 13 பறக்கும் படைகள், கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

தேனி, மார்ச் 16- தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடி யாக அமலுக்கு வந்தன. இந்நிலையில் தேனி மாவட்டத்தில் 13 பறக்கும் படை கள், 13 கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தேனி ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தவும், உரிய ஆவ ணங்கள் இன்றி பணம், பொருட்கள் எடுத்துச் செல்வதை தடுக்கவும் பறக்கும் படைகள், நிலை கண்கா ணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதுபோல், அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களை ஒளிப்பதிவு செய்ய வீடியோ கண்கா ணிப்பு குழுக்களும் அமைக்கப் பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பறக்கும் படையை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 4 குழுக்கள், மற்ற தொகுதிகளுக்கு தலா 3 குழுக்கள் என 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலை கண்காணிப்பு குழுக்களை பொறுத் தவரை ஆண்டிப்பட்டி தொகுதிக்கு 4 குழுக்கள், மற்ற தொகுதிகளுக்கு தலா 3 குழுக்கள் என 13 குழுக் கள் அமைக்கப்பட்டன. வீடியோ கண்காணிப்பு குழுக்களை பொறுத்தவரை ஆண்டிப்பட்டிக்கு 2 குழுக்கள், மற்ற தொகுதி களுக்கு தலா ஒரு குழு வீதம் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் இந்த குழுக்களுக்கு அலுவலர்கள், போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை, நிலை கண்கா ணிப்பு குழு, வீடியோ கண்கா ணிப்பு குழு ஆகிய குழுக்களுக் கான வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதற்காக அந்த வாகனங்கள் ஆட்சியர் அலுவல கத்துக்கு கொண்டு வரப்பட்டன. அதில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டன. அந்த கருவி மூலம் அந்த வாகனங்கள் எங்கு இருக்கிறது என்பதை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப் பாட்டு அறையில் இருந்தபடி அறிந்து கொள்ளலாம். இந்த வாக னங்களின் பயணத்தை தேனி ஆட்சி யரும், மாவட்ட தேர்தல் அலுவல ருமான ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.