தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு
24 Dec 2025, 4:16 pm
<p><strong>தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு</strong></p>
<p>கோவை, டிச.24- தந்தை பெரியார் நினைவு தினத்தை முன்னிட்டு, முற் போக்கு இயக்கங்கள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. தந்தை பெரியார் அவர்க ளின் 52 ஆவதுநினைவு தினத்தை முன்னிட்டு, புத னன்று கோவை மக்கள் ஒற் றுமை மேடை, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமுஎகச உள் ளிட்ட முற்போக்கு இயக்கங் கள் சார்பில் கோவை புலிய குளம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், கோவை மக்கள் ஒற்றுமை மேடை ஒருங்கிணைப் பாளர் கே.எஸ்.கனகராஜ், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர்.மூர்த்தி, என்.சுபாஷ், தமுஎகச மாவட்டச் செய லாளர் அ.கரீம், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணி மாவட் டச் செயலாளர் த.நாகராஜ் உள் ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இதேபோன்று சுந்தராபுரத் தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்விற்கு, ததீஒமு மாவட்டக் குழு உறுப்பினர் கே.கே சுரேஷ் தலைமை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் ஆர்.மகேஸ் வரன், பொருளாளர் எஸ்.சுப்பிர மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு, அமைச்ச ரும், திமுக தெற்கு மாவட்டச் செயலாளருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம், பெரியார் பல்கலைக் கழக வளாகத்தின் முகப்பி லுள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் இரா.சுப்பிரமணி தலைமையில், மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வைத் தொடர்ந்து கல்வி, பெண் விடுதலை, சமத்து வம், சமூகநீதி, சகோதரத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை, பாலின நிகர்நிலை, அறிவியல் சிந்தனை மற்றும் மூடநம்பிக்கை யின்மை முதலான தந்தை பெரி யாரின் சிந்தனைகளை மாண வர்கள் படித்து உணர்ந்து கொள்ளும் நோக்கில் பல் கலைக்கழகத்திலுள்ள நிருவா கக் கட்டடங்கள், துறைக் கட்டடங் கள் உள்ளிட்ட 52 இடங்களில் பெரியாரின் சிந்தனைப் பொன் மொழிகளைக் கொண்ட பலகை களை துறைத்தலைவர்களும் பேராசிரியர்கள், ஆராய்ச்சியா ளர்கள், மாணவர்களுடன் ஒருங் கிணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்வுகளில் மாணவ- மாண வியர்கள் திரளாகப் பங்கேற்ற னர்.</p>
