முந்தய பக்கம்

சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன் மீது தந்தை புகார்

22 Jan 2026, 2:57 pm
சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன் மீது தந்தை புகார்
<p><strong>சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன் மீது தந்தை புகார்</strong></p> <p>சிதம்பரம், ஜன.22- &nbsp;சொத்தை ஏமாற்றி எழுதி வாங்கியதாக மகன் மீது தந்தை புகார் அளித்துள்ளார். சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில், சிதம்பரம் தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி அம்பலவாண நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம ஊராட்சி செயலாளர் அன்பழகன் (76), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மாசிலாமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மனு அளித்தார். அந்த மனுவில், &ldquo;கடந்த 2012-ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். எனது வருமானத்தில் அம்பலவாண நகரில் புதிய இடம் வாங்கி வீடு கட்டியுள்ளேன். இந்த வீட்டையும் மனையையும் எனது மகன் நடன சபேசன் என்னை ஏமாற்றி அவர் பெயரில் எழுதி வாங்கிக்கொண்டார். அதன் பிறகு நான் வாழ்வதற்கு அவர் எந்த உதவியும் செய்யவில்லை. &nbsp;தற்போது எனக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை ரூ. 2,000-ஐக் கொண்டு மிகவும் சிரமத்துடன் வாழ்ந்து வருகிறேன். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் என் மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வீடு கட்டுவதற்குத் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினேன், தற்போது அந்தக் கடனை அடைக்க முடியாமல் நெருக்கடியில் அவதிப்பட்டு வருகிறேன். &nbsp;எனவே, எனது வீட்டு மனைப் பட்டாவை ரத்து செய்து மீண்டும் எனது பெயரில் மாற்றித் தர வேண்டும். இல்லையேல் கடனை அடைத்து எனக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்&rdquo; எனக் குறிப்பிட்டுள்ளார். இதனைப் பெற்றுக் கொண்ட சார் ஆட்சியரின் நேர்முக உதவி யாளர், விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram