தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

14 Feb 2026, 4:33 pm
சென்னை விரைவு செய்திகள்

இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை!  குழந்தைகள் பலி

செங்கல்பட்டு, பிப். 14- மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத் தந்தை தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்பவர், தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த 9-ஆம் தேதி தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் மாமல்லபுரத்திற்கு வந்த அவர், அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சனிக்கிழமையன்று காலை, பிரதீப் தனது உறவினர்களைக் கைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், அவர்கள் அங்கு செல்வ தற்கு முன்பாகவே, பிரதீப் தான் வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை தனது மகள்களான லியா (7) மற்றும் சுபிக்ஷா (4) ஆகியோருக்குக் கொடுத்து விட்டு, தானும் அருந்தியுள்ளார். இதில் இரண்டு பெண் குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பிரதீப்பை மீட்ட மாமல்லபுரம் போலீசார், அவரை சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாவியைத் தேடி எடுத்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்

திருவள்ளூர், பிப்.14 கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள மாநெல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (60). விவசாயியான இவர், வெள்ளியன்று  தனது மனைவி ராஜேஸ்வரியுடன் (54) வங்கி வேலை நிமித்தமாக பாதிரிவேடு பகுதிக்குச் சென்றுள்ளார். வீட்டைப் பூட்டிய தம்பதியினர், சாவியை எடுத்துச் செல்லாமல் வழக்கம்போல வீட்டின் அருகே ஒரு மறைவான இடத்தில் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். வங்கியில் வேலையை முடித்துவிட்டு சுமார் இரண்டு மணி நேரம் கழித்து அவர்கள் வீடு திரும்பியபோது, கதவு திறந்திருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. தம்பதியினர் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், அவர்கள் சாவியை எங்கு வைக்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, சாவியைத் தேடி எடுத்து மிக எளிதாக உள்ளே புகுந்து இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாதிரிவேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இன்று அம்பத்தூர்  பகுதிகளில் மின்தடை

சென்னை, பிப்.14- சென்னையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ஞாயிறன்று (பிப்.15) அம்பத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை முதல் மின்தடை செய்யப்பட உள்ளது. மின்தடை செய்யப்படும் முக்கிய இடங்கள்: அம்பத்தூர் எஸ்டேட்: நியூ டைனி செக்டர், போஸ்ட் ஆபீஸ் ரோடு (2 & 5-வது தெரு), அம்பிட் ஐடி பார்க் ரோடு, 2-வது மெயின் ரோடு (ஸ்பூத் பேஸ்).அம்பத்தூர் சிட்கோ: மாரியம்மன் கோவில் தெரு, குளக்கரை தெரு, கண்ணன் கோவில் தெரு, ஆவின் பிரதான சாலை. இதர பகுதிகள்: ஈபி சாலை (1 முதல் 4-வது தெரு), வடக்கு கட்டம் (31ஏ சாலை, 12 & 13-வது தெரு), கொரட்டூர் டைனி செக்டர்.பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தங்கம் விலை உயர்வு

சென்னை, பிப்.14– சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,560-க்கும், ஒரு சவரன் ரூ. 1,280 உயர்ந்து ரூ. 1,16,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சனிக்கிழமையன்று ரூ.1,280 அதிகரித்துள்ளது. ஆனால் வெள்ளி விலையில்  மாற்றமில்லை. சென்னை யில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 280ஆக தொடர்ந்து விற்பனை யாகிறது. ஒரு கிலோ ரூ.2,80,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தெருநாய்களை  காப்பகத்தில் விட வேண்டும்

கூடுவாஞ்சேரி பிப்.14- நந்திவரம்-கூடு வாஞ்சேரி  நகராட்சியில் உச்ச நீதிமன்ற உத்தரவுப் படி தெருநாய்கள் மற்றும் கால்நடைகளை முறைப் படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தெருநாய்களைப் பிடித்து கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பின், அவற்றை மீண்டும் அதே இடத்தில் விடாமல் பாதுகாப்பான காப்பகங்களுக்கு மாற்ற அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டது. இப்பணிகளில் சுணக்கம் காட்டும் அதி காரிகள் மீது உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் எச்சரிக்கப் பட்டது.

லாரி மோதி  வேன் டிரைவர் பலி

வந்தவாசி, பிப்.14-  வந்தவாசி அருகே லாரி மீது வேன் மோதியதில் டிரைவர்  உயிரி ழந்தார். வந்தவாசி அடுத்த கீழ்சாந்த மங்கலம் இந்திரா நகரை சேர்ந்தவர் அமானுல்லா. இவரது மகன் அசாருதீன்(25). இவர் வெள்ளியன்று  காலை இறைச்சி கோழிகளை வேனில் ஏற்றிக்கொண்டு சேத்துப்பட்டு, பெரண மல்லூர் பகுதிகளில் உள்ள கடை களுக்கு சென்றார். அங்கு ேகாழிகளை விற்பனை செய்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வேனில் வந்து கொண்டி ருந்தார். வந்தவாசி- சேத்துப்  பட்டு சாலை வங்காரம் கூட்ரோடு அருகே வந்த போது, எதிரே வந்த லாரி மீது, வேன் மோதியது. இதில் உடல் நசுங்கி படு காயமடைந்த அசாருதீன், சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். இதுகுறித்து தகவ லறிந்த பொன்னூர் போலீ சார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி, பிரேத பரி சோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ரூ.3 கோடி  கஞ்சா பறிமுதல்

சென்னை, பிப். 14– சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு தாய்லாந்திலிருந்த வந்த  சுற்றுலா வாலிபரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரது சூட்கேசுக்குள் செல்பி முறையில் வீடியோ எடுக்கக்கூடிய தானியங்கி புகைப்பட கருவி இருந்தது. மேலும் 8 பதப்படுத்தப்பட்ட உணவு பாக்கெட்டுகள் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது ஹைட்ரோ போனிக் என்ற பதப்படுத்தப் பட்ட உயர்ரக கஞ்சா 3 கிலோ மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சுங்க இலாகா அதிகாரிகள் கஞ்சாவை கடத்தி வந்த வாலி பரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 கோடி டன் சரக்கு கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை!

சென்னை, பிப்.14– சென்னை துறைமுகம் நடப்பு நிதி ஆண்டில் 5 கோடி டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் 3வது பெரிய இடத்தில் உள்ளது. படிப்படியாக 24 கப்பல்களை நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் சரக்குகளை கையாளுதலில் புதிய சாதனை படைத்துள்ளது. இது குறித்து நிறுவனம் ஒரு அறிக்கையில், ‘இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் வெள்ளி வரை 5 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. முந்தைய ஆண்டைவிட, 18 நாட்கள் முன்பே இந்த மைல் கல்லை எட்டியுள்ளது.  இந்த சாதனை துறைமுகத்தின் மேம்பட்ட செயல்பாட்டுத் திறன், நிலையான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காட்டுகிறது. கண்டெய்னர்கள், கச்சா எண்ணெய், உரம் ஆகியவை அதிகம் கையாளப்படுகின்றன’’ என்று கூறியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 10.67 லட்சம் கண்டெய்னர்களை கையாண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டைவிட ஒப்பிடுகையில், 7.05% அதிகமாகும். இந்த சாதனைக்கு ஆதரவாக இருக்கும் துறைமுக பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு நிறுவனத்தின் தலைவர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

திருப்பதி கோயிலுக்கு 5 பேட்டரி வாகனங்கள்!

திருப்பதி,பிப்.14- சென்னையைச் சேர்ந்த ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் நிறு வனத்தின் மேலாண்மை இயக்கு நர் எம். பால ராமஜெயம், திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்கு ரூ. 33 லட்சம் மதிப்பிலான 5 பேட்டரி வாகனங்களை நன்கொடையாக வழங்கினார். திருமலையில் நடைபெற்ற நிகழ்வில், வாகனங்களின் சாவிகள் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி யிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வாகனங்கள் கோயில் வளாகத்தில் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கவும், திருமலையின் சுற்றுச்சூழ லைப் பாதுகாக்கவும் பயன்   படுத்தப்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

ரகசியமாக  வீடியோ எடுத்த வாலிபர்  கைது

சென்னை, பிப்.14- சென்னை கொளத்தூரில் செவிலியர்கள் தங்கியிருந்த வீட்டின் கழிவறையில் ரகசியமாக வீடியோ எடுத்த சத்யராஜ் (37) என்பவரை பெரவள்ளூர் போலீசார் கைது செய்தனர். அண்டை வீட்டாரின் தகவலின் பேரில் பிடிபட்ட அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டைல்ஸ் வேலை செய்யும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.

புதுச்சேரியில்  பிஎஸ்என்எல் சிறப்பு மேளா

புதுச்சேரி, பிப்.14- புதுச்சேரி பிஎஸ்என்எல் சிறப்பு மேளா விற்பனை முகாம் வருகிற திங்கட்கிழமை (பிப்-16) முதல் வியா ழக்கிழமை வரை ஆகிய நான்கு நாட்கள் நடைபெறுகிறது. புதுச்சேரி  மேட்டுப்பாளையம், ஆனந்தா இன் அருகில், நாவற்குளம் அன்னை நகர், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் எதிரில், திருவண்டார்கோவில்,வில்லியனூர், கரியமாணிக்கம், ராஜீவ் காந்தி  ஆஸ்பிடல் அருகில், ஆர்.டி.வோ ஆபிஸ் அருகில், ஆரியபாளையம், மடுகரை, திருக்கனூர், கோட்டகுப்பம் இந்தியன் பேங்க் அருகில், லாஸ்பேட் ராஜுவ் பார்க் எதிரில், அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட் அருகில் கரிகலாம்பாக்கம் வில்லியனூர் மற்றும் ரங்கபிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம் ஆகிய இடங்களில் இச்சிறப்பு மேளா நடைபெறுகிறது. ரூ.289/-மதிப்புள்ள சிம் கார்ட் ரூ. 150/- மட்டுமே இந்த சிம் கார்டில் 35 நாட்களுக்கு ஒரு நாளைக்கு2ஜிபி டேட்டா & 100  எஸ்எம்எஸ் மற்றும் அளவில்லாமல் அழைப்புகள் இலவசம். வாடிக்கையாளர்  தங்களிடம் உள்ள 4ஜி சிம் கார்டுதானா என அறிந்து கொள்ள 9442824365 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்கொடுத்து தெரிந்து கொள்ளலாம். புதிய 4ஜி-சிம் கார்டை இலவசமாக மாற்றிக் கொள்ளலாம். இதனுடன் பெற்றுக்கொள்ளலாம். 4 ஜிபி இலவச டேட்டாவையும், மேலும் பிஎஸ்என்எல் புதிய  எப்டிடிஎச் (FTTH) திட்டமான ஸ்பார்க் (SPARK) உடன் அதிவேக இணையத்தை வெறும் ரூ.399 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் விவரங்களுக்கு வாட்ஸ்அப் செய்யவும் அல்லது 18004444 என்ற எண்ணிற்கு டயல் செய்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு பிஎஸ்என்எல் புதுச்சேரி பொது மேலாளர்  வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

சிலாட் போட்டி தொடங்கியது

கடலூர், பிப்.14- கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் மாநில அளவிலான 4-வது கடற்கரை பென்காக் சிலாட் சாம்பியன் போட்டி நடைபெற்றது.  இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, தேசிய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் இணை செயலாளரும், தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்க பொது செயலாளருமான மகேஷ் பாபு ஆகியோர் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.  மாநகர தி.மு.க. செயலாளர் கே.எஸ்.ராஜா, தமிழ்நாடு பென்காக் சிலாட் சங்க பொருளாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி உள்பட 28 மாவட்டங்களை சேர்ந்த 780 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். 5 வயது முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.