முந்தய பக்கம்

கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்றம் அமைக்கக் கோரி உண்ணாவிரதம்

11 Mar 2026, 4:32 pm
கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்றம்  அமைக்கக் கோரி உண்ணாவிரதம்
<p><strong>கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்றம் &nbsp;அமைக்கக் கோரி உண்ணாவிரதம்</strong></p> <p>விழுப்புரம், மார்ச் 11- &nbsp;கண்டாச்சிபுரம் வட்டத்தில் நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அமைக்கக் கோரி, வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரகண்டநல்லூர் கடைவீதியில் திங்களன்று உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர் வி.பிரபாகரன் தலைமை தாங்கிய இந்தப் போராட்டத்தில், கண்டாச்சிபுரம் வட்டம் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள் வரவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. உடனடியாக நீதிமன்றம் மற்றும் சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram