ஆடை வடிவமைப்பு தொழில் பெண்களுக்கு வழிகாட்டும்!
10 Apr 2026, 5:30 am

ஆடை வடிவமைப்பு தொழில் பெண்களுக்கு வழிகாட்டும்!

சென்னை, ஏப். 9- பிக்கி ஃபுளோ சென்னை அமைப்பு சார்பில், ஆடை வடிவமைப்புத் துறையில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்த “ஆடை வடிவமைப்பு வணிகம்” கலந்துரையாடல் சென்னையில் வியாழக்கிழமை (ஏப்.9) நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் டாக்டர் அமுல்யா ராவ் தலைமையில் நடந்த இதில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜெயந்தி ரெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பாரம்பரியக் கலையை உலகளாவிய பிராண்டாக மாற்றும் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் தகைமையுள்ள தொழில்களை ஊக்குவிப்பதே தங்களின் நோக்கம் என டாக்டர் அமுல்யா ராவ் தெரிவித்தார். கைத்தறி மற்றும் செயற்கை நுண்ணறிவு பயிற்சிகள் மூலம் பெண்களை மேம்படுத்தும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.