முந்தய பக்கம்

ஆடை வடிவமைப்பு தொழில் பெண்களுக்கு வழிகாட்டி!

10 Apr 2026, 5:30 am
ஆடை வடிவமைப்பு தொழில் பெண்களுக்கு வழிகாட்டி!

ஆடை வடிவமைப்பு தொழில் பெண்களுக்கு வழிகாட்டி!

சென்னை, ஏப். 9- பிக்கி ஃபுளோ சென்னை அமைப்பு சார்பில், ஆடை வடிவமைப்புத் துறையில் உள்ள வணிக வாய்ப்புகள் குறித்த “ஆடை வடிவமைப்பு வணிகம்” கலந்துரையாடல் சென்னையில் வியாழக்கிழமை (ஏப்.9) நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் டாக்டர் அமுலியா ராவ் தலைமையில் நடந்த இதில், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜெயந்தி ரெட்டி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பாரம்பரியக் கலையை நவீனகால பிராண்டாக மாற்றும் நுணுக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்.

பெண்கள் தலைமையிலான தொழில்களை ஊக்குவிப்பதே தங்களின் நோக்கம் என டாக்டர் அமுலியா ராவ் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு கைத்தறி, ஆட்டோமொபைல் மற்றும் செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் தொழில்நுட்பப் பயிற்சிகள் மூலம் பெண்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும் அவர் முன்னிலைப்படுத்தினார். திரளான பெண் தொழிலதிபர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram