தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை
17 Feb 2026, 3:36 pm
<p><strong>தக்காளி விலை சரிவால் விவசாயிகள் கவலை</strong></p>
<p>தருமபுரி, பிப்.17- பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்து, விலை கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் கவ லையடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, வெள்ளிச்சந்தை, பாப்பாரப்பட்டி, பெல்ரம்பட்டி, சோமனஹள்ளி, பேகாரஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பாலக்கோடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை கடுமை யாக சரிந்து, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.8 வீதமும், 15 கிலோ எடை கொண்ட கூடை ரூ.120 வரைக்கும் விற்பனையானது. தொடர்ந்து, திங்களன்று மேலும் குறைந்து கிலோ ரூ.6 வீதமும், கூடை ரூ.90க்கும் விற்பனையானது. தக்காளி விலை கடும் சரிவை சந்தித்துள்ளதால், தக்காளி பயிரிட்ட விவசாயிக ளும், வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர்.</p>
