தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

27 Mar 2026, 3:15 pm
சென்னை விரைவு செய்திகள்

தம்பியை கொலை செய்த அண்ணன்  காவல் நிலையத்தில் சரண்டர்

திருப்பத்தூர், மார்ச் 27- திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுகா, ஆத்தூர் குப்பம் களிமுத்தன் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் மகன் இளவரசன் (45) இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு தற்போது தான் வந்துள்ளார். இவருடைய பங்காளி சத்யன் (47) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளியன்று மீண்டும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. அப்போது சத்யன் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டியதில் இளவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெட்டிய சத்யன் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார். கைது  செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவில் உண்டியல் உடைத்து  ரூ. 30ஆயிரம்  கொள்ளை

திருவள்ளூர், மார்ச் 27-  திருவள்ளூர் நகர காவல் நிலையம் அருகே அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ஸ்ரீ காளிகாம்பாள் சமேத காமாட்சியம்மன் திருக்கோவிலில், உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் 30,000 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் வியாழன்இரவு கோவில் பூசாரி நாராயணன் பூசைகளை முடித்துவிட்டுத் திருக்கோவிலைப் பூட்டிச் சென்றார். வெள்ளிக்கிழமை கோவிலைத் திறக்க வந்தபோது, கோபுர வாசலில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உண்டியலில் இருந்த சுமார் ரூ.30ஆயிரம் ரொக்கப் பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து 500 மீட்டர் தொலைவில் உள்ள திருவள்ளூர் நகர காவல் நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

கடன் தொல்லையால்  இரு குழந்தைகளுடன்  கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

காஞ்சிபுரம், மார்ச் 27- காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஷாம்ஷியா (26), தனது 10 வயது மகள் ஆசிபா மற்றும் 5 வயது மகன் அப்சர் ஆகியோருடன் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவரது கணவர் ஆசிப் தொழில் நஷ்டம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து ஷாம்ஷியா குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார். கடன் தொல்லை காரணமாக மனமுடைந்த அவர், இந்த விபரீத முடிவை எடுத்திருப்பது போலீசார் கைப்பற்றிய கடிதத்தின் மூலம் தெரியவந்துள்ளது. மணிமங்கலம் போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண் மருத்துவ நிபுணர்கள்  ஒருங்கிணைந்து செயல்பட அழைப்பு

சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு நிரப்பப்படாத சிலிண்டர்களில் “ஏப்ரல் 23 அன்று 100 % தவறாமல் வாக்களிப்போம்,என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற உறுதிமொழி அடங்கிய வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ்குமார் ஒட்டினார்.

கிருஷ்ணகிரி, மார்ச் 27-  அகசிப்பள்ளி ஊராட்சியில் உள்ள பேட்டேப்பள்ளி தொடக்கப்பள்ளியில் ஆசிரியைக ளிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஆசிரியர்களின் போட்டி மனப்பான்மையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்துள்ளது. அதனால் பெற்றோர்களும் பொதுமக்களும் வியாழனன்று பள்ளிக் கூடத்தை முற்றுகையிட்டனர்.  இது குறித்து தகவலறிந்து வந்த வட்டார கல்வி அலுவலர் பாபு ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்.மேலும் ஆழமான விசாரணைக்குப் பின்னரே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் முற்றுகையிட்ட பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

அரசுப்பள்ளி பெற்றோர் முற்றுகை: அரசு அதிகாரிகள் விசாரணை

சென்னை, மார்ச் 27-  உலகக் கண் மருத்துவ தினத்தை முன்னிட்டு கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில், கண் மருத்துவ அறிவியல் தொழில்முறை கவுன்சிலின் தலைவர் டாக்டர் ஆர். கிருஷ்ணகுமார் உரையாற்றினார்.  சர்க்கரை நோய் பாதிப்பு மற்றும் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கண் மருத்துவ நிபுணர்கள் பிற மருத்துவப் பிரிவினருடன் இணைந்து பணியாற்றுவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். அவர் பேசுகையில், “நோயாளிக்கு நீங்கள் ஒரு கண் பராமரிப்புப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக இருக்கிறீர்கள். தொழில்நுட்பம் தரவுகளை மட்டுமே தரும், ஆனால் ஒரு மனிதராக நீங்கள்தான் நோயாளியின் தேவையைப் புரிந்து கொண்டு சிறந்த கவனிப்பை வழங்க முடியும்” என்றார். இக்கூட்டத்தில் பேசிய கண் மருத்துவ நிபுணர் ராஜாகண்ணன், தகவல் தொழில்நுட்பத் துறையினருக்கு இணையாக, ஏழைத் தொழிலாளர்களின் கண் நலனிலும் நிபுணர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். சங்கர நேத்ராலயா எலைட் பள்ளி முதல்வர் அனுராதா நாராயணன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

ஓட்டேரியில் நகை திருடிய  பெண் கைது

சென்னை, மார்ச் 27-  சென்னை ஓட்டேரி அருகே மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி வீடுபுகுந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பெண்ணைச் தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (41) மற்றும் அவரது மனைவி கடந்த மார்ச் 16-ஆம் தேதி காலை வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றனர். மாலை அவரது மனைவி வீடு திரும்பியபோது, பீரோ மற்றும் லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது. இது குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், லக்ஷ்மி (40) என்ற பெண் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி இந்தத் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 97.7 கிராம் தங்க நகைகள், 256 கிராம் வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ. 1.55 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, மார்ச் 27- சென்னையில்  22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் 13 ஆயிரத்து 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.245க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,45,000க்கு விற்பனை ஆகிறது

.மோட்டா நெல் மூட்டைகள் தேக்கம்  விவசாயிகள் கவலை

விழுப்புரம், மார்ச் 27- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மோட்டா ரக நெல் மூட்டைகள் தேங்குவ தால் நெல் விற்பனை செய்ய பதிவு செய்த விவசாயிகள் பாதிப்படைந்து வருவ தாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்டி.முருகன் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகளின் பிரதான பயிராக நெல் பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள் நெல் உற்பத்தியில் டெல்டா மாவட்டத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவு நெல்  நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.  இந்நிலையில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை தனியார் விவசாயிகள் மற்றும் அரசு ஒழுங்குமுறை கூடத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலை இருந்து வந்துள்ளது. இதனால் விவ சாயிகள் பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகி வந்தனர் இந்த நிலையிலிருந்து விடுபட விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் 70க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் விழுப்புரம் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது .இதன் மூலம்  லாபகரமான விலை விவசாயி களுக்கு கிடைக்கவில் என்றாலும் அரசு நிர்ணயம் செய்த விலை கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக  மேலாளருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கிடையில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல் மூட்டைகள்  5000 முட்டை களுக்கு மேல் அங்கேயே அடுக்கி வைக்கப்  பட்டுள்ளது. சன்ன ரக நெல் மூட்டைகள் உடனடியாக அரவை மில்லுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் மோட்டா ரகம்நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது .இதனால் பல நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களில் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டிருக்கிறது இதனால் 100க்கும் மேற்பட்ட பதிவு செய்த விவசாயிகள் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது இதன் காரணமாக விவசாயிகள் குறைந்த விலைக்கு தனியார் நெல் வியாபாரி களிடம் போடும் நிலைமை உருவாகிறது. மேலும் கோடை மழை வந்தால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் நனைந்து போகும் சூழ்நிலை உள்ளது.எனவே உடனடியாக பதிவு செய்தி ருக்கும் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதை உறுப்படுத்திட வேண்டும்.அதே நேரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டி ருக்கும் மூட்டைகளை வேறு மாவட்டங்க ளில் அரவை மில் களுக்கு கொண்டு செல்வதும் நமது மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகளில்  மோட்டா ரக நெல் அரைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும். கொள்முதல் செய்த நெல்லை நேரடி நெல் நிலையங்களில் தேங்கிக் கிடக்காமல் எடுத்துச் செல்லவும். பதிவு செய்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடி யாக நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்வதாக அவர் அதில் தெரி வித்துள்ளார்.

சிலிண்டர்களில் தேர்தல் விழிப்புணர்வு

கிருஷ்ணகிரி, மார்ச் 27- சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் தேர்தலில் 100 விழுக்காடு வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு நிரப்பப்படாத சிலிண்டர்களில் “ஏப்ரல் 23 அன்று 100 % தவறாமல் வாக்களிப்போம்,என் வாக்கு விற்பனைக்கு அல்ல” என்ற உறுதிமொழி அடங்கிய வில்லைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ்குமார் ஒட்டினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.