முந்தய பக்கம்

உடைந்த ஏரிக்கரையைச் சீரமைக்கக்கோரி விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை!

19 Feb 2026, 3:09 pm
உடைந்த ஏரிக்கரையைச் சீரமைக்கக்கோரி  விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை!
<p><strong>உடைந்த ஏரிக்கரையைச் சீரமைக்கக்கோரி &nbsp;விவசாயிகள் போராட்ட எச்சரிக்கை!</strong></p> <p>கிருஷ்ணகிரி, பிப். 19 - ஊத்தங்கரை வட்டம், கெங்கபிராம்பட்டி ஊராட்சியில் உள்ள சித்தகவுண்டன் ஏரியின் கரை கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு பெய்த கடும் மழை மற்றும் புயலால் சேதமடைந்தது. தற்போது பெய்யும் சிறு மழையினால் கூட ஏரிக்கு வரும் தண்ணீர், உடைந்த கரை வழியாக அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீரைத் தேக்கி வைக்க முடியாமல் உடைந்த கரை வழியாக நீர் முழுவதும் வெளியேறிவிடுவதால், மழை இல்லாத காலங்க ளில் ஏரி வறண்டு காணப் படுகிறது. இதனால் விவ சாயத்திற்குத் தண்ணீர் இன்றிப் பயிர்கள் காய்ந்து போவதாக இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரி விக்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டு களாக உடைந்த ஏரிக் கரையைச் சீரமைக்க வலி யுறுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகளுக்குப் பொது மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். இருப்பி னும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிகிறது. எனவே, வரும் மழைக் காலத்திற்கு முன்பாக ஏரிக்கரையைச் சீரமைக்க வேண்டும் என்றும், தவறி னால் இப்பகுதி விவ சாயிகளையும் பொது மக்களையும் திரட்டிப் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram