நிலம் அளவீடு செய்வதில் குளறுபடி விவசாயகள் காத்திருப்பு போராட்டம்
4 Jan 2026, 5:55 pm
<p><strong> நிலம் அளவீடு செய்வதில் குளறுபடி விவசாயகள் காத்திருப்பு போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், ஜன.4- எருமப்பட்டி அடுத்த பொன் னேரி கைகாட்டி பகுதியிலிருந்து கோம்பை வரை சாலை அமைப் பதில் நிலவும் ஆக்கிரமிப்பு சிக்கல் களால், விவசாய சங்கத்தினர் ஞாயி றன்று, மீண்டும் தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு களை முழுமையாக அகற்றி, சாலை அமைக்கும் வரை போராட் டம் தொடரும் என அவர்கள் அறி வித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், எருமப் பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பொன் னேரி கைகாட்டி முதல் கோம்பை வரை சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பது அப்பகுதி மக்க ளின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இது தொடர்பாக ஏற் கனவே பல்வேறு கட்டப் போராட் டங்கள் நடைபெற்றன. சாலை அமைய வேண்டிய இடம் ‘ஓடை புறம்போக்கு’ என்பதால், அங்கு சாலை அமைக்க சட்ட சிக்கல்கள் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய மனு அளித்தால் தற்காலிக மண் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப் பட்டதை அடுத்து, நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கின. சுமார் 90 சதவீத நிலம் அளவீடு செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள 10 சதவீத நிலத்தை அளவிடும் போது நில உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 18 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கும் பகு தியில் சாலை அமைக்க நில உரிமை யாளர்கள் முட்டுக்கட்டை போட்ட தால் அதிகாரிகள் பணியை நிறுத்தி னர். கடந்த வாரம் நாமக்கல் ஆர்.டி.ஓ சாந்தி தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, “15 நாட்களுக்குள் நிலம் முழுமையாக அளவீடு செய்யப் பட்டு சாலை வசதி செய்யப்படும்” என உறுதியளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மீண்டும் போராட்டம்: இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் நிலம் அளவீடு செய்யும் பணி தொடங்கி யது. அப்போது பணியில் குளறு படிகள் நடப்பதாகக் கூறி, தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை பொன்னேரி கைகாட்டி பகுதியில் மீண்டும் தர்ணா போராட்டத்தில் குதித்த னர். இதுகுறித்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் கூறுகையில்: “நான்கு தலைமுறைகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையை சிலர் ஆக்கிரமித் துள்ளனர். அங்கு வேலி அமைத்து வாழை, தென்னை, பாக்கு மற்றும் தேக்கு கன்றுகளை நட்டு விவசா யம் செய்து வருகின்றனர். பொதுப் பாதையை ஆக்கிரமித்துள்ள இந்த தோட்டங்களை முழுமை யாக அகற்றி, சாலை அமைத்துத் தரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது,” எனத் தெரிவித்தனர். தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தி வரு கின்றனர்.</p>
