விவசாயிகளின் கருத்துகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும்! அமைச்சர் ர. வினோத் உறுதி
4 Jul 2026, 9:26 pm
<p><strong>விவசாயிகளின் கருத்துகள் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறும்! அமைச்சர் ர. வினோத் உறுதி</strong></p><p>தஞ்சாவூர்/கும்பகோணம், ஜூலை 4 - விவசாயிகளிடம் கேட்கப்பட்ட கருத்துகள் மற்றும் கோரிக்கை கள் அனைத்தும், விரைவில் வெளியாக உள்ள வேளாண்மைத் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக் கிழமை, டெல்டா மற்றும் திருச்சி உள்ளிட்ட 9 மாவட்ட விவசாயி களுக்கான பட்ஜெட் முன்தயாரிப்பு கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆர். ரேவதி வரவேற்றார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் பொ. சங்கர் நோக்க உரையாற்றினார். சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜகான், எம்.எல்.ஏ-க்கள் மாரிமுத்து, பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டப் பல மக்கள் பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் ர. வினோத் பேசுகையில், “தமிழ கத்தில் மாபெரும் வேளாண்மைப் புரட்சியை ஏற்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசு பல்வேறு திட்டங்களைச் செயல் படுத்துகிறது. விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு பட்ஜெட்டில் சேர்க்கப்படும்” என்றார். அமைச்சர் எச்சரிக்கை தொடர்ந்து கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள், திரு நங்கைகள் உள்ளிட்ட 44 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டாக்களை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளுக்குக் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டப் பலன்களை முறையாக வழங்காத வேளாண் மைத் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.</p>
