நூறு நாள் வேலை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்
27 Feb 2026, 5:32 pm
<p><strong>நூறு நாள் வேலை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, பிப்.27- வேலை அட்டை வைத்துள்ள அனைவ ருக்கும், 100 நாள் வேலை வழங்க வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், ஆட்சியர் சதீஷ் தலைமையில் வெள் ளியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவ சாயிகள் பேசுகையில், தருமபுரி மாவட்டத் தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட வேலை அட்டை பெற்றவர்களுக்கு குறைந்த பட்சம் 100 நாட்கள் பணி வழங்க வேண்டும். பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் சர்க்கரை ஆலை மூலம் கரும்பு விவசாயிக ளின் வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்ட பணத்தை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் வங்கிகளுக்கு செல்லும் விவசா யிகள் சில நாட்கள் பணம் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படுகின்றனர். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். சர்க்கரை ஆலை மூலம் மாதந்தோறும் அனுப்பப்படும் பயிற்சி கையேடு விவசாயிகளுக்கு முறையாக சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணையின் வலதுபுற கால் வாய் மூலமாக காரிமங்கலம் பகுதியில் உள்ள ஏரிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வாணியாறு அணையின் உபரி நீர் கடை மடை பகுதிக்கு வந்து சேரவில்லை. இதுதொ டர்பாக உரிய ஆய்வு நடத்தி கடைமடை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தருமபுரியில் புற நகர் பேருந்து நிலையம் இட மாற்றம் தொடர் பாக வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி, புதிய புறநகர் பேருந்து நிலையத்திலி ருந்து நகரப் பகுதிக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும், என்றனர்.</p>
