தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தரணி சர்க்கரை ஆலையிடமிருந்து பாக்கித் தொகையை பெற்றுத்தருக  ஆட்சியருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

27 Feb 2026, 5:32 pm
தரணி சர்க்கரை ஆலையிடமிருந்து பாக்கித் தொகையை பெற்றுத்தருக  ஆட்சியருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
<p><strong>தரணி சர்க்கரை ஆலையிடமிருந்து பாக்கித் தொகையை பெற்றுத்தருக &nbsp;ஆட்சியருக்கு விவசாயிகள் வலியுறுத்தல் </strong></p> <p>திருவண்ணாமலை, பிப்.27- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக பிப்ரவரி மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப்.27) நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் தரணி சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை பெற்று வழங்கிட வேண்டும், அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில் தட்டுப்பாடின்றி யூரியா இருப்பு வைத்து வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பயிர் காப்பீடு முத்தரப்பு கூட்டம் மற்றும் பால் முத்தரப்புக் கூட்டம் நடத்திட வேண்டும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை தூர்வாரிட வேண்டும், பெஞ்சால் புயல் மழையால் இடிந்த கிணறுகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும், கறவை மாடுகளுக்கு இன்சூரன்ஸ் கால்நடை பராமரிப்பு துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன், வேளாண்மை இணை இயக்குநர் கண்ணகி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மலர்விழி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.