பிஏபி பாசனக்கால்வாய் தூர்வார நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
29 Dec 2025, 6:22 pm
<p><strong>பிஏபி பாசனக்கால்வாய் தூர்வார நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி</strong></p>
<p>கோவை, டிச.29- கோவை வருகை தந்த முதல்வரிடம் விவசாயிகள் நேரில் சென்று, பிஏபி பாசனக் கால்வாய் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக நன்றி தெரிவித்தனர். மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கோவை விமான நிலை யத்தில் முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப் பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் திமுகவி னர் உற்சாகமான வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வரவேற்பிற்குப் பிறகு, அவிநாசி சாலை யில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த முதல மைச்சரை, திருமூர்த்தி நீர்த்தேக்கம் - பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட (பிஏபி) விவசாயிகள் நேரில் சந்தித்தனர். தங்கள் நீண்ட காலக் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்தமைக்காக அவர்கள் முதலமைச் சருக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.</p>
