தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பசுந்தேயிலை விலை குறைவால் விவசாயிகள் சேதனை

1 Apr 2026, 4:02 pm
பசுந்தேயிலை விலை குறைவால் விவசாயிகள் சேதனை
<p><strong>பசுந்தேயிலை விலை குறைவால் விவசாயிகள் சேதனை</strong></p> <p>உதகை, ஏப்.1- கடந்த மாதத்தை விட பசுந்தேயிலை &nbsp;விலை குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடி செய்து வருகின்ற னர். இவர்களிடமிருந்து 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் &nbsp;தனியார் தேயிலை தொழிற்சாலைகள் &nbsp;மூலம் தேயிலை கொள்முதல் செய்யப் படுகிறது. ஆனால், நீண்ட வருடங்க ளாக நீலகிரியில் பசுந்தேயிலைக்கு உரிய விலை இல்லாமல் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காததால், விவ சாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனடிப்படையில் மாதந்தோறும் ஏல மையங்களில் விற் பனையாகும் தேயிலைத்தூளின் விலைக்கு ஏற்ப பசுந்தேயிலைக்கு விலை நிர்ணயிப்பதற்காக ஒரு கமிட்டி &nbsp;அமைக்கப்பட்டு உள்ளது. இதனடிப் படையில் குன்னூரிலுள்ள தென்னிந் திய தேயிலை வாரியம் பசுந்தேயிலைக் கான மாதாந்திர விலையை நிர்ணயித்து &nbsp;நீலகிரி மாவட்ட தொழிற்சாலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வருகிறது. இதன் படி இந்த மாத பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக ரூ.18.81 நிர்ண யிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு மற் றும் தனியார் தேயிலை தொழிற்சாலை &nbsp;உரிமையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விவசாயிகளுக்கு வழங்க &nbsp;வேண்டும் என்று தென்னிந்திய தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டுள் ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், கடந்த நான்கு மாதங்களாக விலை &nbsp;சற்று அதிகரித்துக் கொண்டே வந்தது. &nbsp;கடந்த மாதம் ரூ.18.98 ஆக விலை இருந்த நிலையில், இந்த மாதம் அதை விட சற்று அதிகரிக்கும் என்று எதிர் பார்த்த நிலையில், அதைவிட விலை குறைந்துள்ளது. &nbsp;கிலோவுக்கு சாகுபடி &nbsp;செலவு மட்டும் 22 ரூபாய் இருப்பதால் ஒரு கிலோவுக்கு 40 ரூபாய்க்கு மேல் &nbsp;விலை கிடைத்தால் தான் கட்டுபடியா கும். அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் &nbsp;நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.