பயிர்க் கடன் தள்ளுபடி, காப்பீட்டுப் பிரீமியம் கோரி அக். 21-இல் 500 இடங்களில் சாலை மறியல் விவசாய சங்கங்கள் அறிவிப்பு
8 Oct 2026, 10:57 pm

பயிர்க் கடன் தள்ளுபடி, காப்பீட்டுப் பிரீமியம் கோரி அக். 21-இல் 500 இடங்களில் சாலை மறியல்

விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர், அக். 8 -தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி கூட்டுறவுப் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும், சம்பா - தாளடிபயிர் காப்பீட்டுப் பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி, அக்டோபர் 21 அன்று தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சாலை மறியல்போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் வியாழக் கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள், அகில இந்தியவிவசாயிகள் மகாசபை யின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின், மாநிலப் பொதுச் செயலாளர்கள் பி.எஸ். மாசிலாமணி, சாமி. நடராஜன், மகாசபைத் துணைத் தலைவர் வி. ஐயன்துரை ஆகியோர் செய்தியாளர்களிடம் கூட்டாகப் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி. ரவீந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

முக்கியக் கோரிக்கைகள்தவணை

முறையில் கடன் தள்ளுபடி செய்வதை ஏற்க முடியாது எனவும், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற அனைத்துப்பயிர்க் கடன்களையும் முழுமை யாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர்கள்வலியுறுத்தினர். பம்புசெட் மூலம் சம்பா - தாளடிசாகுபடி தொடங்கியுள்ள தால், புதிய பயிர்க் கடன் களை நிபந்தனையின்றி உடனடியாக வழங்கவேண்டும். மேட்டூர் அணை திறந்து 38 நாட்கள் ஆகியும் வயல்களுக்குத் தண்ணீர் வந்து சேராததால் கூடுதல் நீர் திறக்க வேண்டும்; காவிரிமேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து மாதவாரி நீர் பெறச் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதையும் வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கவேண்டும். எல் நினோ மழையைச் சமாளிக்ககண்மாய், வாய்க்கால், நீர்நிலைக் கரைகளைப் பலப்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.

ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டருக்கு எதிர்ப்பு

மின் உற்பத்தி - விநியோகம் தனியார்மயத்தின் ஒரு பகுதியாக ப்ரீபெய்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த தனியாரிடம் ஒப்பந்தம் கோரிஅக்டோபர் 7 அன்று மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையைக் கண்டித்த அவர்கள், இதனால் 23 லட்சம் விவசாயமின் மோட்டார்களுக்கான இலவச மின்சாரம், வீடுகளுக்கான 200 யூனிட் இலவசம், 11 லட்சம் வீடுகளுக்கான ஒரு விளக்கு இணைப்பு, சிறு-குறு தொழில் மானியம்ஆகியவை ரத்தாகும் அபாயம் இருப்பதால், இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் வலி யுறுத்தினர். இக்கோரிக்கைகளை முன்வைத்து அக்டோபர் 21 அன்று நடைபெறும் சாலை மறியலில் விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டும் என்று அவர்கள் அறிக்கையிலும் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.