சூரியகாந்தி அமோக விளைச்சல் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை
23 Jan 2026, 5:49 pm
<p><strong>சூரியகாந்தி அமோக விளைச்சல் அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை</strong></p>
<p>ஒட்டன்சத்திரம், ஜன.23- ஒட்டன்சத்திரம் பகுதிகளில் தொடர் மழையின் காரணமாக சூரியகாந்தி பயிர்கள் அமோக விளைச்சல் அடைந்து ள்ள நிலையில், அரசே நேரடியாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்தி ரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரப் பகுதிகளில் உள்ள கோம்பைபட்டி, சத்திரப்பட்டி, ராமபட்டினம்புதூர், புதுக் கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக சூரியகாந்தி பயிரிட்டுள்ளனர். கரிசல் மண் நிலம் என்பதாலும், கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் போதிய மழை பெய்ததாலும், சூரியகாந்தி பூக்கள் நன்கு பூத்துக் குலுங்குகின்றன. எதிர்பார்த்ததை விட மகசூலும் சிறப்பாக உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து கோம்பைபட்டியைச் சேர்ந்த விவசாயி துரைச்சாமிநாயக்கர் கூறியதாவது,”கோம்பைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் சூரியகாந்தி சாகுபடி செய் தோம். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக பூக்கள் நன்கு மலர்ந்து, விளைச்சல் அதிகரித்து ள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி யில் உள்ளோம். வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் அறுவடை செய்ய முடி யும். தற்போது சூரியகாந்தி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. அறுவடை காலத்தில் விலை மேலும் உய ரும் என்ற நம்பிக்கை உள்ளது. விளைச்சல் நன்றாக இருப்பதால் குறைந்த அளவு உரம் போதுமானதாக உள்ளது. ஆனால் களை கள் எடுப்பதற்கு போதிய கூலி ஆட்கள் இல்லாததால் சிரமம் ஏற்படுகிறது. தனி யார் வியாபாரிகள் அறுவடை காலத்தில் விவசாய நிலத்திற்கே வந்து சூரியகாந்தி யை வாங்கிச் சென்று எண்ணெய் எடுப்ப தற்கும், சக்கையை கோழி தீவன மாக பயன்படுத்துவதற்கும்கொண்டு செல்கின்றனர். அரசே விவசாயிகளி டமிருந்து நேரடியாக சூரியகாந்தியை கொள்முதல் செய்தால் விவசாயிகளுக்கு அதிக பயன் கிடைக்கும்” என்றார்.</p>
