அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது விருதுநகர், சிவகங்கையில் விவசாயிகள் போராட்டம்
4 Nov 2026, 10:50 pm

அடையாள அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது விருதுநகர், சிவகங்கையில் விவசாயிகள் போராட்டம்

விருதுநகர், நவ.4-உரம், பயிர்க் கடன் மற்றும் அரசு மானியம் வாங்குவதற்குத் தடையாக இருக்கும் விவசாயிகள் அடையாள அட்டையை ரத்து செய்ய வேண்டும். திருவில்லிபுத்தூர் வட்டத்தில் தினசரி மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இப்போராட்த்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.வி.சசிக்குமார் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாநிலச் செயலாளர் அ.விஜயமுருகன் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட துணைத் தலைவர் கே.சுப்பாராஜ், ஒன்றியச் செயலாளர் பெருமாள்ராஜ் ஆகியோர் பேசினர். மாவட் டச் செயலாளர் வி.முருகன் கண்டன உரையாற்றினார்.

சிவகங்கை

சிவகங்கையில் ஒன்றியத் தலைவர் ரவி தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் வேங்கையா, பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் விஸ்வநாதன் மற்றும் கருணாநிதி, கணேசன், மகாலிங்கம், நல்லியப்பன், அன்பரசு, கலையரசன், வி.ராஜேந்திரன், சுப்பையா, நாகராஜ், பாலமுருகன் ஆகியோர் பேசினர்.