நெல் கொள்முதல் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
11 Jun 2026, 11:32 pm

நெல் கொள்முதல் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை, ஜூன் 11- திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசி வட்டத்தில் தேசிய கூட்டுறவு நுகர் வோர் கூட்டமைப்பின் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வந்தவாசி வட்டத்தில் ஆயி ரக்கணக்கான விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான பணம், கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் முறையிட்டும், தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள், வியாழக்கிழமை (ஜூன் 11) வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ந.இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர். இதில் மாநில துணைச் செயலாளர் பி.துளசி நாராயணன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி நேரில் வந்த துணை வட்டாட்சியர், ஜூன் 12 முதல் விவசாயிகளுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படும் என உறுதியளித்தார். நிர்வாகத்தின் உறுதியை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், ஒருவேளை பணம் வழங்கப்படாவிட்டால் வரும் ஜூன் 25-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தனர்.