தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க்கடன் முழு தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 11:26 pm
பயிர்க்கடன் முழு தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பயிர்க்கடன் முழு தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 20 - விவசாயிகள் பயிர்க்கடன் முழு மையாக தள்ளுபடி செய்யப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி முழு தள்ளுபடி கோரி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் திருப் பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங் கள் முன்பாக திங்களன்று ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் வாக்குறுதிப்படி 5 ஏக் கர் வரை நிலம் வைத்துள்ள விவ சாயிகளுக்கு முழுக்கடன் தள்ளு படியும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு 50 சதவீதம் கூட்டுறவு பயிர்க்கடன் களை தள்ளுபடி செய்ய வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் திருப்பூர் மாவட்டத்தில் 14 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங் கள் முன்பாக நடைபெற்றது. ஊத்துக்குளி தாலுகாவில் ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங் கம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கொளந்தசாமி தலைமையிலும், நடுப்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக தமிழ்நாடு விவ சாயிகள் சங்க நிர்வாகி பால சுப்பிரமணியம் தலைமையிலும், திருப்பூர் ஒன்றியம் பெருமா நல்லூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் முன்பாக விவ சாயிகள் சங்க வடக்கு ஒன்றியத் தலைவர் ரங்கசாமி தலைமை யிலும், அவிநாசி ஒன்றியத்தில், ராக்கியாபாளையம் கூட்டுறவு சங்க முன்பு கிளைச் செயலாளர் வெங் கடாசலம் தலைமையிலும், வஞ்சி பாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் முத்துசாமி தலைமையிலும், வடுகபாளையம் கூட்டுறவு சங்கம் முன்பு கிளைச் செயலாளர் பொன்னுச்சாமி தலைமையிலும், நடுவச்சேரி கூட்டுறவு சங்க முன்பு விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் ராஜேஷ் தலைமையிலும், கூட்டப்பள்ளி முன்பு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் பொருளாளர் குமாரசாமி தலைமையிலும், குட்டகம் கூட்டு றவு சங்கம் முன்பு முன்னாள் கூட்டு றவு சங்க தலைவர் பொன்னுச் சாமி தலைமையிலும், பழங்கரை கூட்டுறவு சங்கம் முன்பு சிஐடியு அவிநாசி பொதுத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையிலும், சேவூர் கூட்டுறவு சங்கம் முன்பு சிபிஐ விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர். குமார், சிபிஐ தாலுகா செயலாளர் சரவணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். சிபிஎம் தாலுகா செயலாளர் சரஸ்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் கேசவன் (சிபிஐ), தலைவர் கோபால கிருஷ்ணன் (சிபிஎம்), சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் காம ராஜ், முன்னாள் ஊராட்சித் தலைவர் செல்வி, சிபிஐ ஊத்துக் குளி கிளை செயலாளர் குமரன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். அவிநாசி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், நகர மன்ற உறுப்பினர் சுப்பிரமணி, தேவராஜன், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கவுரி மணி, ஒன்றிய தலைவர் முத்துரத்தினம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சண்முகம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமியப் பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஏஐடியூசி பொதுத் தொழிலா ளர் சங்க மாவட்டச் செயலாளர் ரவி மற்றும் பெருமாநல்லூரில் விவசா யிகள் சங்க ஒன்றியச் செயலாளர் அப்புசாமி, கமிட்டி உறுப்பினர் ராஜன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். உடுமலை ஒன்றியம் பள்ளபாளையம், எரி சினம்பட்டி, பெரிய வாளவாடி, மடத்துக்குளம், கணியூர் பகுதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத் தில் விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் மதுசூதணன், தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பரமசிவம், சங்கத்தின் நிர்வாகிகள் பாலதண்ட பாணி, ராஜகோபால், அருண்பிர காஷ், தமிழ்தென்றல், வீரப்பன், வெள்ளியங்கிரி, ராஜரத்தினம் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கலந்து கொண்டார்கள். இப் போராட்டங்களில் விவசாயிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.