பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
23 Jul 2026, 11:50 pm
<p><strong>பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 23 - தமிழ்நாட்டில் விவசாயிகள் கூட்டுறவு சங்கங்க ளில் பெற்றுள்ள பயிர் கடனை முழுமையாக தள்ளு படி செய்யக்கோரி, திருப்பூர் ஒன்றியம் பட்டம்பாளை யம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் வடக்கு ஒன்றியக் குழு சார்பில் வியாழனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய துணைச் செய லாளர் ஏ.நடராஜ் தலைமை ஏற்றார். முன்னோடி விவ சாயி பழனிச்சாமி முன்னிலை வகித்தார். இதில், விவ சாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர். குமார், அவிநாசி ஒன்றியச் செயலாளர் எஸ்.வெங் கடாசலம், திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.அப்புசாமி, ஒன்றியத் தலைவர் கே.ரங்கசாமி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கணேஷ் உள்ளிட் டோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் கையெழுத் திட்ட கோரிக்கை மனுவினை பட்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளரிடம் அளித்தனர்.</p>
