முந்தய பக்கம்

உர விலை உயர்வை ரத்து செய்யகோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

27 May 2026, 12:35 am
உர விலை உயர்வை  ரத்து செய்யகோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
<p><strong>உர விலை உயர்வை ரத்து செய்யகோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பத்தூர், மே 26- திருப்பத்தூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றியி பாஜக அரசை கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் முல்லை மற்றும் தாலுகா தலைவர் சிங்காரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில அரசு கூட்டுறவு பயிர் கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், அனைத்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய கடன் தள்ளுபடி இருக்க வேண்டும் என கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் சிபிஐ மாவட்ட செய லாளர் நந்தி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன், மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, சிபிஎம் கட்சி தாலுகா செயலாளர் காமராஜ், விவசாய சங்க தாலுகா செயலாளர் ஆனந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுந்தரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram