உர விலை உயர்வை திரும்ப பெற கோரி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
27 May 2026, 10:49 pm
<p><strong>உர விலை உயர்வை திரும்ப பெற கோரி நெல்லையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருநெல்வேலி, மே 27- ஒன்றிய அரசின் உர விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை வண்ணார் பேட்டையில் புதனன்று தமிழ்நாடு விவசா யிகள் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். வி. கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செல்வராஜ் மாவட்ட துணைத் தலை வர்கள் செல்லத்துரை, என்.எஸ்.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக் கைகளை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சடையப்பன், தமிழ்நாடு விவசாயிகள் மாவட்ட நிர்வாகி கலை முருகன் ஆகியோர் பேசினர். ஒன்றிய அரசின் உர விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியின் படி கூட்டுறவு கடன் களை முழுமையாக தள்ளுபடி செய்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம்.சுடலைராஜ் ஆர்ப்பாட் டத்தை முடித்து வைத்து பேசினார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் ஆர்.மதுபால் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ராமலிங்கம், முப்புடாதி, ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
