முந்தய பக்கம்

உரவிலை உயர்வை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

29 May 2026, 12:07 am
உரவிலை உயர்வை ரத்து செய்ய கோரி  விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>உரவிலை உயர்வை ரத்து செய்ய கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>​​​​​​​திருத்துறைப்பூண்டி, மே 28- திருவாரூர் மாவட்டம் திருத்து றைப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஒன்றிய அரசின் உரவிலை உயர்வை ரத்து செய்ய க்கோரியும், மாநில அரசு கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வலியு றுத்தியும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில், எஸ். முத்துசெல்வம், நடராஜன், எம். ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் கேஆர்.ஜோசப், மாவட்டப் பொருளாளர் எஸ். சுவாமிநாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், விவசாயிகள் என பலர் கண்டன கோஷங்களை எழுப்பினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram