தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கொப்பரை கிலோவுக்கு ரூ.180 விலை நிர்ணயம் கோரி விவசாயிகள் போராட்டம்

yesterday
கொப்பரை கிலோவுக்கு ரூ.180 விலை நிர்ணயம் கோரி விவசாயிகள் போராட்டம்

கொப்பரை கிலோவுக்கு ரூ.180 விலை நிர்ணயம் கோரி விவசாயிகள் போராட்டம்

தேனி, ஜூன் 22- கொப்பரைக்கு கிலோ ரூ.180 விலை நிர்ணயம் செய்யவும், தேங் காயை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்யவும் வலி யுறுத்தி, தமிழ்நாடு தென்னை விவ சாயிகள் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேங் காயை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரித்த தேங்காய்க்கு கிலோ ரூ.60, உரிக்காத தேங்காய்க்கு கிலோ ரூ.30 மற்றும் கொப்ப ரைக்கு கிலோ ரூ.180 என நிரந்தர விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் வலியுறுத்தினர்

. மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காயை அரசே நேர டியாக கொள்முதல் செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை வலி யுறுத்தி, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் தேங்காயை உடைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

போராட்டத்திற்கு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத் தின் தேனி மாவட்டத் தலைவர் எம்.வி.முருகன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி. அம்சராஜ், மாவட்டப் பொருளாளர் ஆர்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத் தார். மாநிலக்குழு உறுப்பினர் கே. ராஜப்பன் நிறைவுரையாற்றினார்.

போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே. பாண்டியன், மாவட்டப் பொருளா ளர் கே.எஸ்.சந்திரன், லட்சுமணன், முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பிச்சைமணி தலைமை வகித்தார். ராஜேந்திரன் முன்னிலை வகித் தார்.

மாநில துணைத் தலைவர்கள் எஸ்.ஆர்.மதுசூதனன், மு.கரு ணாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட் டத் தலைவர்கள் என்.பெருமாள், எம்.ராமசாமி, ஆர்.தயாளன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.