அரசுகளின் சலுகைகளைப் பெற,உரம் வாங்க விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்காதே திருவைகுண்டத்தில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
4 Nov 2026, 10:43 pm

அரசுகளின் சலுகைகளைப் பெற,உரம் வாங்க விவசாய அடையாள எண்ணை கட்டாயமாக்காதே திருவைகுண்டத்தில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,நவ.4-ஒன்றிய, மாநில அரசுகள் ,விவசாயிகள் அரசுகளின் சலுகைகளைப் பெற,உரங்கள் வாங்கிட, பயிர்காப்பீடு செய்திட அடையாள அட்டை கட்டாயம் என்பதை தமிழ்நாட்டில் வற்புறுத்தக்கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள்சங்கம் சார்பில் திருவைகுண்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் செயல்படுத்திடும் விவசாய திட்டங்களின் சலுகைகளை பெறவும், உரங்களை வாங்கிடவும், பயிர் காப்பீடு உள்ளிட்ட அனைத்திற்கும் விவசாய அடையாள எண் ( (Farmer ID) கட்டாயம் என அறிவித்திருப்பதை கண்டித்தும் மாநில அரசு ஒன்றிய அரசின் அடையாள அட்டை கட்டாயம் என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தாமல் பழைய முறைப்படியே விவசாயிகள் அரசின் சலுகை

களை பெற அனுமதித்திட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீவைகுண்டம் பழைய வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் நம்பிராஜன், மாவட்ட நிர்வாகிகள் டி.சீனிவாசன், ஐ. கணபதி ,மணி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ரமேஷ் ராமச்சந்திரன் ,பூலான் பொன்ராஜ் ,முருகேசன் ஆகியோர் பேசினர்.