கழிவுகளால் சுகாதார சீர்கேடு: விவசாயிகள் போராட்டம்
13 Mar 2026, 4:52 pm
<p><strong>கழிவுகளால் சுகாதார சீர்கேடு: விவசாயிகள் போராட்டம்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 13- சேந்தமங்கலம் பேரூராட்சியில் கோழிக்கழிவுகள் கொட்டி மாசுபடுத்து வதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, விவ சாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்க லம் பேரூராட்சி, பச்சுடையாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பச்சடையான்பட்டி புதூர், கோணானூர், பெரிய மாரியம் மன் கோவில் எதிர்புறம், காந்திபுரம் உள் ளிட்ட பகுதிகளிலுள்ள கோழிக்கடை களின் கழிவுகள், பேரூராட்சியை ஒட்டி யுள்ள குளத்தின் கரை மீதுள்ள சாலை யிலும், குளத்தின் உட்பகுதியிலும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப் பகுதியில் துர்நாற்றமும், தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக குவியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. மேலும், இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் கால் நடைகளை நாய்கள் கடிக்கின்றன. இதனையடுத்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் கால்நடைகளுடன் வெள்ளியன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு, சங்கத்தின் மாவட்டக்குழு உறுப் பினர் எஸ்.கே.சிவச்சந்திரன் தலைமை யில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் பங்கேற்ற, காவல்துறை ஆய்வா ளர், பேரூராட்சி செயல் அலுவலர், பேரூ ராட்சி சேர்மன் உள்ளிட்டோரிடம், கோழிக் கடை உரிமையாளர்களை அழைத்து கழிவுகளை முறைப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி னர். அதற்கு, கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதாக பேரூராட்சி நிர்வாகம் வாக்குறுதி அளித்தது. அதன் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத் திவைக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.பெருமாள், துணைத்தலைவர் மு.து.செல்வராஜ், நகரச் செயலாளர் ஆறுமுகம், எருமப் பட்டி சங்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் இளவ ழகன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.</p>
