உரவிலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்
28 May 2026, 11:47 pm

உரவிலை உயர்வை கண்டித்து நாகர்கோவிலில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்.மே.28- உர விலை உயர்வை கண்டித்து குமரி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவி லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. உரவிலை உயர்வு, பயிர் கடன் தள்ளுபடியை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயி கள் சங்கங்கள் சார்பில் நாகர்கோயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார் மாவட்ட செய லாளர் ஆர். ரவி துவக்கி வைத்து பேசினார் நாக ராஜன், ராஜகுமார், மதன் மோகன்லால், சென்பக சேகரன்பிள்ளை, இசக்கி முத்து ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் விஜி, வின் சென்ட், ஆறுமுகம்பிள்ளை சின்னதம்பி, செல்லநாடார், ராஜு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.