விவசாயிகளின் முழுக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
28 May 2026, 12:04 am
<p><strong>விவசாயிகளின் முழுக்கடனை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவள்ளூர், மே 27- தமிழ்நாடு அரசு விவசாயிகள் வாங்கிய முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதனன்று (மே 27), கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 5 ஏக்கர் வரையுள்ள விவசாயிகளுக்கு முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்கு மேற்பட்ட ஏக்கர் கொண்ட விவசாயிகளுக்கு 50 விழுக்காடு கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் உர விலையை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர். இதில் விவசாயிகள் சங்கத்தின் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் சிறப்புரை யாற்றினார்.வட்ட தலைவர் முனிரத்தினம், துணைத் தலைவர்கள் பி.கருணாமூர்த்தி, செல்வராணி, உத்துக்கோட்டை வட்டச் செயலாளர் எம்.திருப்பதி ஆகியோர் பேசினர்.</p>
