முந்தய பக்கம்

வாடிய பயிர்களுடன் விவசாயிகள் பேரணி: மேகதாது அணைக்கு எதிராக நூதன ஆர்ப்பாட்டம்

17 Aug 2026, 10:55 pm
வாடிய பயிர்களுடன் விவசாயிகள் பேரணி: மேகதாது அணைக்கு எதிராக நூதன ஆர்ப்பாட்டம்

வாடிய பயிர்களுடன் விவசாயிகள் பேரணி: மேகதாது அணைக்கு எதிராக நூதன ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக. 17- திருச்சி லால்குடியில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டனப் பேரணி மற்றும் கைகளில் பிச்சைப்பாத்திரம் (திருவோடு) ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லால்குடி சந்தைப்பேட்டை பகுதியில் துவங்கிய இந்த பேரணி, லால்குடி ரவுண்டான வரை நீண்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், போதிய தண்ணீர் இன்றி வாடிய கரும்பு, வாழை மற்றும் நெற்பயிர்களை கைகளில் ஏந்தியபடி தங்களின் வேதனையை வெளிப்படுத்தி ஊர்வலமாகச் சென்றனர். இந்த பேரணிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் புரவலர் விசுவநாதன் தலைமை தாங்கினார்.

லால்குடியில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில், விவசாயிகள் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து வகையான விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய பங்கீட்டு நீரை பெற்றுத்தர வேண்டும். மேகதாது அணை அணைக்கட்டும் கர்நாடகா மாநில அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram