தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் கூடுதல் ஒதுக்கீடு கோரி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

6 Jul 2026, 11:24 pm
குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் கூடுதல் ஒதுக்கீடு கோரி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
<p><strong>குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் கூடுதல் ஒதுக்கீடு கோரி வேளாண் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்</strong></p><p>காட்டுமன்னார்கோவில், ஜூலை 6- குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் கூடுதல் பரப்பளவைச் சேர்க்க வலியுறுத்தி, காட்டுமன்னார்கோவில் மற்றும் ஆயங்குடி வேளாண் துறை அலு வலகங்களை விவசாயிகள் முற்று கையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒதுக்கீடு பற்றாக்குறை காட்டுமன்னார்கோவில் ஒன்றியப் பகுதிகளில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். ஆனால், இதில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மட்டுமே அரசு குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதனால், மீதமுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். முற்றுகைப் போராட்டம் இதைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை அலுவலகத்தை முற்று கையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாய சங்கத் தலைவர்கள் பிரகாஷ், கலியமூர்த்தி, சரவணன் உள்ளிட்ட பலர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, குறுவை சாகுபடி செய்த அனைத்து விவசாயி களையும் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆயங்குடி வேளாண் துறை அலுவலகத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உறுதியளித்த அதிகாரிகள் வேளாண் துறை அதிகாரிகளுடன் நடை பெற்ற பேச்சுவார்த்தையில், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 3 ஆயிரம் ஏக்கருடன் கூடுதலாக 2,500 ஏக்கரைத் திட்டத்தில் சேர்க்க அரசிடம் அனுமதி கோருவது என முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.