பாசனத்திற்கு நீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்
5 Oct 2026, 1:01 am

பாசனத்திற்கு நீர் திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

காட்டுமன்னார்கோவில், அக் 4-காட்டுமன்னார்கோவில் பேருந்து நிலையம் அருகே காட்டுமன்னார்கோவில், குமராட்சி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விதைப்பு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருவதால்,விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜேஷ்கண்ணன், மாவட்டத் தலைவர் சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச்செயலாளர் ரவிச்சந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.