முந்தய பக்கம்

விவசாயிகள் கூட்டுறவு வங்கி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி

21 Jun 2026, 1:39 am
விவசாயிகள் கூட்டுறவு வங்கி  பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி
<p>விவசாயிகள் கூட்டுறவு வங்கி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி மற்றும் 5 ஏக்கருக்கு மேல் வாங்கிய கடன்களுக்கு 50 சதம் பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று (ஜூன் 20) வேலூர் மற்றும் கோவிந்தவாடி ஆதரம் வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் ஆர்ப்பாட்டத்திற்கு ஜோதி, கோவிந்தவாடி அகரம் ஆர்ப்பாட்டத்திற்கு மூர்த்தி தலைமை தாங்கினர். இதில் கே. நேரு என். சாரங்கன் கே. செல்வம் என். நந்தகோபால் கே.ஜீவா, ஜீ.லட்சும்பதி, எஸ்.பழனி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram