பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன் 22 இல் காத்திருப்புப் போராட்டம்
14 Jun 2026, 1:35 am
<p><strong>பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன் 22 இல் காத்திருப்புப் போராட்டம்</strong></p><p>டி.ரவீந்திரன் பேட்டி திருப்பூர், ஜூன் 13- தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ஜூன் 22 ஆம் தேதி சென்னை கூட்டுறவு தலைமை பதிவாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விவசா யிகள் அரங்க அரசியல் பயிற்சி முகாம் நடை பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் டி.ரவீந்திரன் வெள்ளியன்று கூறியதாவது: தவெக அரசு அறிவித்த கூட்டுறவு கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. தேர்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிக ளின் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்க வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி சென்னை கூட்டுறவு தலைமைப் பதி வாளர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் விவசாய சங்கங்கள் சார்பில் நடைபெறும். மடத்துக்குளம் அமராவதி கூட் டுறவு சர்க்கரை ஆலைக்கு புனரமைப்பு நிதி ஒதுக்கி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பரம்பிக்குளம் ஆழியாறு திட் டத்தில் நல்லாறு அணை உடனே கட்ட வேண் டும். தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு சந்தை மதிப்பில் இழப்பீடு உடனுக்குடன் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள குறுவை சாகுபடிக்கு சிறப்பு தொகுப்பு திட்டத்தை வரவேற்கி றோம். அதே நேரத்தில் சாகுபடி செய்ய முடி யாமல் பாதிப்புகுள்ளான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற் சியை கண்டிக்கத்தக்கது. முதல்வர் விஜய் அந்த முயற்சியை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.</p>
