விவசாயிகளை வஞ்சிக்கும் அமெரிக்க தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 22 மோடி - டிரம்ப் உருவப்பொம்மை எரிப்புப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்!
2 Jul 2026, 10:01 pm
<p><strong>விவசாயிகளை வஞ்சிக்கும் அமெரிக்க தாராளமய வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 22 மோடி - டிரம்ப் உருவப்பொம்மை எரிப்புப் போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல்!</strong></p><p>புதுதில்லி, ஜூலை 2 - இந்திய விவசாயத் துறையையும், நாட்டின் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அமெரிக்காவுடன் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள ‘தாராள வர்த்தக ஒப்பந்தத்திற்கு’ (Free Trade Agreement) எதிராக வரும் ஜூலை 22 அன்று நாடு தழுவிய அளவில் உரு வப்பொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச்செயலாளர் டாக்டர் விஜூ கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க ஏகாதி பத்தியத்திற்கு முன்னால் ஆர்எஸ்எஸ்-பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இந்த அளவிற்குச் சரணா கதி அடைந்திருப்பது இந்திய வர லாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒன்றாகும். இந்த ஏகாதிபத்திய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானால், அது இந்திய விவசாயிகளின் வாழ்வா தாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும்” என்று எச்சரித்துள்ளனர். தேசப் பாதுகாப்பு மற்றும் விவசாயி களின் நலனைக் காக்க, உழைக்கும் மக்களும் தேசபக்தி மிக்க அனைத்துப் பிரிவினரும் இந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க வேண்டும் என சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜூலை 22 அன்று மாலை, அனைத்துப் பகுதிகளி லும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் உருவப்பொம்மை கள் எரிக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த மக்கள் விரோத வர்த்தக ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு உடனடி யாகக் கைவிடாவிட்டால், ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் திரட்டி மிகத் தீவிரமான போர்க்குணமிக்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் விவசாயிகள் சங்கம் எச்சரித் துள்ளது.</p>
