உரம், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
26 May 2026, 10:12 pm
<p><strong>உரம், எரிபொருள் விலை உயர்வை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>விருதுநகர், மே 26- ஒன்றிய அரசின் உர விலை உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண் டும் என்றும், 5 ஏக்கர் வரை நிலம் கொண்ட விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடியும், 5 ஏக்க ருக்கு மேல் நிலம் கொண்டவர் களுக்கு பாதி கடன் தள்ளுபடியும் வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கை வாக்குறுதியை மாநில அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெற்றன. சிவகங்கை அதனொரு பகுதியாக, சிவ கங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சி அலுவலகம் முன்பு மாவட் டச் செயலாளர் கே.வீரபாண்டி, காம ராஜ் ஆகியோர் தலைமை தாங்கி னர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜி.சங்கையா, அ.ஆறு முகம் ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாவட்ட பொருளாளர் பி. விஸ்வநாதன், மாவட்டத் தலை வர் கே.ஆறுமுகம், ஒன்றியத் தலை வர் பரமாத்மா ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநிலத் துணைத் தலை வர் எம்.முத்துராமு நிறைவுரை ஆற்றினார். இராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் தாலுகா தலைவர் இருளப்பதாஸ் தலைமை வகித் தார். மாவட்டத் தலைவர் எம்.முத்து ராமு, மாவட்டச் செயலாளர் வி. மயில்வாகணன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர்.கருணாநிதி, மாவட்ட துணைத் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். திருவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு முத்தா லம்மன் சாவடி முன்பு ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலா ளர் பெனரி, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் ஜெயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜய முருகன் நிறைவு செய்து பேசினார். தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் காளிதாசன், பழனிச்சாமி, சிபிஎம் மூத்த தோழர் முருகேசன், மலைச்சாமி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
