தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

8 Jan 2026, 2:44 pm
பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>விருதுநகர், ஜன.8- தமிழக அரசால் கடந்த 3 ஆண்டு களாக பால் கொள்முதல் விலை &nbsp;உயர்த்தப்படாததை கண்டித்து, &nbsp;விருதுநகரில் பால் உற்பத்தியா ளர்கள் மற்றும் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பருத்திக்கொட்டை, புண் ணாக்கு, தவுடு, கலப்பு தீவனம் &nbsp;உள்ளிட்ட கால்நடை தீவனங்க ளின் விலை பல மடங்கு உயர்ந் &nbsp;துள்ள நிலையில், பால் கொள் முதல் விலையை ஒரு லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மேலும், &nbsp;பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45 மற் &nbsp;றும் எருமைப் பாலுக்கு ரூ.60 வழங்க &nbsp;வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். கடந்த 3 மாதங்களாக வழங் கப்படாத ஊக்கத்தொகையை உட னடியாக வழங்க வேண்டும் எனவும் &nbsp;ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட் டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள் ராஜ் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் &nbsp;அ.விஜயமுருகன் ஆர்ப்பாட்டத் தைத் துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் வி.முருகன் கண்டன உரை நிகழ்த்தினார். குழந்தைகள் சத்துணவு திட்டத் தில் பால் வழங்க வேண்டும், &nbsp;தொடக்க சங்க ஊழியர்களின் சம்ப ளத்தை உயர்த்த வேண்டும் ஆகிய &nbsp;கோரிக்கைகளையும் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தேனி தேனி மாவட்டம் போடி அருகே தர்மத்துப்பட்டியில் கூட்டு றவு உற்பத்தியாளர்கள் தொகுப்பு &nbsp;பால் குளிர்விப்பான் மையம் முன்பு &nbsp;நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் கே.செல்வ ராஜ் தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் எச்.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். விவசாயி கள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் &nbsp;கே.ராஜப்பன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாவட்டத் தலைவர் &nbsp;எஸ்.கே.பாண்டியன், மாவட்ட நிர்வாகி எஸ்.சுருளி வேல், எஸ்.செல்வம், மொக்கச் சாமி, காமராஜ், ராமகிருஷ்ணன், முருகேசன் உள்ளிட்டோர் முழக்க மிட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.