கம்பம், ஆண்டிபட்டியில் விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
26 May 2026, 10:21 pm
<p><strong>கம்பம், ஆண்டிபட்டியில் விவசாயிகள் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தேனி, மே 26- ஐந்து ஏக்கருக்கு கீழ் உள்ள விவ சாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு பயிர் கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். 10 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு 50 சதம் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உர விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி இடதுசாரி விவசாயி கள் சங்கங்களின் சார்பில் கம்பம், ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கம்பம் தேவர் சிலை அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ விவ சாயிகள் சங்க செயலாளர் எஸ்.கான் தலைமை வகித்தார். சிபிஐ விவசாயி கள் சங்க மாநில துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பெ.அய்யப்பன், கோம்பை செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன் நிறைவு செய்து பேசினார். ஆண்டிபட்டியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் கே.எஸ்.சந்திரன் தலைமை வகித் தார். ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் பி. ராமன், விவசாயிகள் சங்க நிர்வாகி கள் இ.பாண்டி, சக்தி முருகன், பாஸ்க ரன் ஆகியோர் பேசினர். மாவட்டச் செயலாளர் டி.கண்ணன் ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்து பேசினார்.</p>
