பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 10:44 pm
<p><strong>பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்</strong></p><p>சேலம், ஜூலை 21- பயிர்க்கடனை முழுமையாக தள் ளுபடி செய்ய வலியுறுத்தி சேலத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் கூட்டுறவு வங்கி களில் வாங்கிய பயிர்க்கடன் அனைத் தையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியு றுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன் னணியினர் சேலம் மாவட்டம், குப்ப னூர் தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கம் அலுவலகம் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். வி.அய்யந் துரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க நிர்வாகி எஸ்.நாராயணன், விவசாயி கள் சங்க நிர்வாகிகள் சமூக ஆர்வ லர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். முன்னதாக இந்த ஆர்ப்பாட்டத் தின் போது விவசாயிகள் ஆடுகளை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பொதுமக்களின் கவ னத்தை ஈர்த்தது. நாமக்கல் நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு, காந்தியாசிரமம் புதுப்பாளை யம் தொடக்க வேளாண்மை கூட்டு றவு சங்க அலுவலகம் முன்பு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆர். வேலாயுதம் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.பூபதி துவக்கவுரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன் நிறை வுரையாற்றினார். இதில், திருச்செங் கோடு ஒன்றியத் தலைவர் ஏ.ஆர்.முத்துசாமி, எலச்சிபாளையம் ஒன்றி யத் தலைவர் ஆர்.குப்புசாமி, ஒன்றி யச் செயலாளர் பொன்னி மேடு பெரியசாமி, பொருளாளர் சி.பெரிய சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.</p>
