தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட கோரிக்கை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

20 Jul 2026, 10:05 pm
பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட கோரிக்கை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பயிர்க் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்திட கோரிக்கை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 20- பயிர்க் கடன் முழுவதையும் தள் ளுபடி செய்திடக் கோரி திங்க ளன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாவட்டத் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். வட்டாரச் செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

வட்டார பொருளாளர் போஸ், துணைத் தலைவர்கள் வேலு, ஜெய ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வட்டாரச் செயலாளர் இ.க. தட்சிணாமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ராஜன், நகர செயலாளர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலாடி இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் எதிரில் மேற்கு தாலுகாச் செயலாளர் எஸ்.சிவன் பெருமாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலை வர் சொரிமுத்து ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில் வாகணன் துவக்க உரையாற்றி னார். மாவட்டத் துணைச் செயலா ளர் டி.நவநீதகிருஷ்ணன், தாலுகா துணைத் தலைவர் காந்தி, தாலுகா தலைவர் இருளப்பதாஸ் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். சிபிஐ விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கருணாநிதி நிறை வுரையாற்றினார்.

தேவிப்பட்டினத்தில் தாலுகா செயலாளர் கல்யாணசுந்தரம், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிபிஐ விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.கருணா நிதி துவக்க உரையாற்றினார். தாலுகா தலைவர் ராமமூர்த்தி, தாலுகா பொருளாளர் நாகரத்தி னம் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.மயில் வாகணன் நிறைவுரையாற்றினார்.

திருவாடனைய மத்திய கூட்டு றவு வங்கி முன்பு விவசாயிகள் சங்க (சிபிஐ) தாலுகா செயலாளர் ஜெய ராமன், சிபிஎம் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ விவசாய சங்க மூத்த நிர்வாகி குரு சாமி துவக்க உரையாற்றினார்.

சிஐ டியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ. சந்தானம் விளக்க உரையாற்றி னார். விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் சேதுராமு, விவசாயிகள் சங்க தாலுகா தலை வர் ராமநாதன், பொருளாளர் முரு கன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். சிபிஎம் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.முத்துராமு நிறை வுரையாற்றினார்.

விருதுநகர்

விருதுநகர் அருகே உள்ள செங்குன்றாபுரம் கூட்டுறவு வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியத் தலைவர் பெரு மாள்ராஜ் தலைமை வகித்தார். துவக்கி வைத்து மங்கையற்கரசி பேசினார். போராட்டத்தை ஆத ரித்து சிபிஎம் வடக்கு ஒன்றியச் செய லாளர் ராஜேந்திரன் பேசினார். மாநி லக்குழு உறுப்பினர் மாரியப்பன் கண்டன உரையாற்றினார்.

திருச்சுழி வட்டம் பரளச்சி மத் திய கூட்டுறவு வங்கி முன்பு நடை பெற்ற போராட்டத்திற்கு வட்டத் தலைவர் ஆர்.பெருமாள் தலைமை வகித்தார். சங்கரபாண்டி முன் னிலை வகித்தார். சிபிஐ ஒன்றியச் செயலாளர் செல்வம் கண்டன உரையாற்றினார். பூரணம், கூடலிங் கம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.