முந்தய பக்கம்

2025 விதை மசோதா நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

9 Dec 2025, 4:25 pm
2025 விதை மசோதா நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>2025 விதை மசோதா நகலை எரித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>மயிலாடுதுறை, டிச.9- மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 17, 18இல் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்த ரூ. 63 கோடி நிவாரணத்தை உடனே வழங்கிட கோரியும், ஒன்றிய அரசின் விவசாயிகள் விரோத மசோதாக்களை கைவிட வலி யுறுத்தியும், விவசாயிகள் விரோத ஒன்றிய அரசின் 2025 விதை மசோதாவை உடனே ரத்து செய்யக் கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப் பட்டனர். &nbsp;அனைத்து விவசாய சங்கங் களின் கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலை மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி.சிம்சன் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். டிட்வா புயல் நிவாரணத்திற்கு ஜிபிஆர்எஸ் மூலம் கணக்கீடு செய்வதை கைவிட்டு, வழக்கம் போல் விஏஓ, ஏஏஓ மூலம் கணக்கீடு செய்து 2024 உளுந்து பயிறுக்கான ஒன்றிய அரசின் பங்கு ரூ.22 கோடி இன்சூரன்ஸ் தொகை யை உடனடியாக பெற்றுக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடந்த போராட்ட த்தைத் தொடர்ந்து, விவசாயிகள் விரோத ஒன்றிய அரசின் 2025 விதை மசோதா நகலை எரித்து ஆவேசமாக முழக்கமிட்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram