தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெருக்கடியான நடைமுறைகளை கைவிட்டு விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்கிடுக! ஆலங்குளத்தில் விவசாயிகள்

23 Sept 2026, 10:10 pm
நெருக்கடியான நடைமுறைகளை கைவிட்டு விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்கிடுக! ஆலங்குளத்தில் விவசாயிகள்

நெருக்கடியான நடைமுறைகளை கைவிட்டு விவசாயிகளுக்கு எளிதாக கடன் வழங்கிடுக! ஆலங்குளத்தில் விவசாயிகள்

சங்கம் ஆர்ப்பாட்டம்தென்காசி, செப்.23-விவசாயிகளுக்கு பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன் வழங்குவதில் தேவையற்ற நெருக்கடிகளைஏற்படுத்தும் நடைமுறைகளை கைவிட்டு, எளிதாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குளம் வட்டாரச் செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் அசோக்ராஜ், மாவட்டத் தலைவர் கணபதி, ஆலங்குளம் வட்டாரத் தலைவர் சங்கரன் ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்கும் உறுப்பினர் அட்டை மற்றும் பங்குத்தொகை சான்றிதழ் (Share Certificate) வழங்க வேண்டும். ஆலங்குளம், மருதபுரம்புதூர் மற்றும் கிடாரக்குளம் கூட்டுறவு சங்கங்களில் நிரந்தர செயலாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். காசிக்குவாய்த்தான் உபரி நீர் கால்வாய் திட்டத்தில் உள்ள தடங்கல்களை அகற்றி, திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.